சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். "புற்றுநோய் சுற்றுலா" காரணமாக ஹிமாச்சல் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர் மனு சிங் எச்சரித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு & காஷ்மீர் போன்ற இமயமலை மாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளம், நிலச்சரிவு மற்றும் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டன. பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர்.
இந்த தீவிர வெள்ளம் மற்றும் மேகவெடிப்புக்கு காலநிலை மாற்றமே காரணம் என்று டாக்டர் மனு சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவபது: காலநிலை மாற்றம் இமயமலையில் இயற்கையாக ஏற்படும் மாறுபாட்டை அதிகரிக்கிறது. மேலும் இமயமலையின் தட்பவெப்ப நிலையை மாற்றுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க மாநில அரசு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். இதே நிலை நீடித்தால் ஹிமாச்சல் பிரதேசம் வரைபடத்தில் இருந்து அழிந்துவிடும் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது என்றாஸர்.
ஹிமாச்சல் பிரதேசத்தின் நிலைமை மோசமாகி வருவதாக உச்ச நீதிமன்றமும் கவலை தெரிவித்துள்ளது. "காலநிலை மாற்றம் மாநிலத்தில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்று நீதிமன்றம் கூறியுள்ளது. "வருவாய் ஈட்டுவது மட்டுமே முக்கியமல்ல. சுற்றுச்சூழலை அழித்து வருவாய் ஈட்டக்கூடாது" என்று நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
டாக்டர் மனு சிங் மேலும் கூறுகையில், "மொத்த பாதிப்பில் 80% காலநிலை மாற்றத்தால் ஏற்படுகிறது. மீதமுள்ள 20% இயற்கையான காரணங்களால் ஏற்படுகிறது. புவி வெப்பமயமாதலால் காற்றின் வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் காற்று அதிக ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்கிறது. மேலும் காலநிலை மாறிக்கொண்டே இருக்கிறது. குமுலோநிம்பஸ் மேகங்கள் 700% அதிகமாக உருவாகின்றன. அடர்த்தியான மேகங்கள் அதிக ஈரப்பதத்தை கொண்டிருக்கும். இந்த மேகங்கள் இமயமலையை தாக்கும்போது அதிக மழை பெய்கிறது. இதனால் மேகவெடிப்பு ஏற்படுகிறது.
ஒரு மணி நேரத்தில் 100 மி.மீ மழை பெய்தால் அதை மேகவெடிப்பு என்கிறோம். இது 20 முதல் 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பெய்யும். திட்டமிடப்படாத கட்டுமானங்கள், சாலைகள், ஹோட்டல்கள் கட்டுவதால் நிலச்சரிவு ஏற்படுகிறது. ஆறுகள் சேதப்படுத்தப்படுகின்றன. தர்மசாலாவில் ஆற்றின் நடுவே கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன. இது மனித முட்டாள்தனம். உலக வெப்பநிலை அதிகரிப்பதால் காற்று வெப்பமாகிறது. இதனால் அதிக ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. காலநிலை மாற்றத்தால் மேகங்கள் அடர்த்தியாகின்றன. இந்த மேகங்கள் இமயமலையை தாக்கும்போது அதிக மழை பெய்கிறது. இது உத்தரகாண்ட், காஷ்மீர், ஹிமாச்சல் மட்டுமல்லாமல் சீனா, பாகிஸ்தானிலும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
ஈரப்பதம் நிறைந்த மேகங்கள் இமயமலையை தாக்கும்போது அதிக மழை பெய்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் இதை வரையறுத்துள்ளது. ஒரு மணி நேரத்தில் 100 மி.மீ மழை பெய்தால் அதை மேகவெடிப்பு என்கிறோம். இது 20 முதல் 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பெய்யும். திட்டமிடப்படாத கட்டுமானங்கள், குப்பைகள் காரணமாக நிலச்சரிவு ஏற்படுகிறது. இதனால் பேரழிவு உண்டாகிறது. திட்டமிடப்படாத நகரமயமாக்கல், பெரிய கட்டுமான திட்டங்கள் வெள்ளத்திற்கு காரணமாகின்றன. சட்டவிரோதமாக கட்டுமானங்கள் கட்டப்படுகின்றன. அறிவியல் பூர்வமாக சாலைகள் அமைக்கப்படவில்லை. சுற்றுச்சூழலை கருத்தில் கொள்ளாமல் ஹோட்டல்கள் கட்டப்படுகின்றன.
இது இளம் மலைகளை அழிக்கிறது. இந்த கட்டுமானங்கள் சரிவுகளை நிலையற்றதாக்குகின்றன. இதனால் நிலச்சரிவு ஏற்படும்போது தண்ணீர், கான்கிரீட் மற்றும் குப்பைகள் வேகமாக வெளியேறுகின்றன. ஆறுகள் சேதப்படுத்தப்படுகின்றன என்றார்.
கனமழையால் பாலங்கள் அடித்து செல்லப்பட்டதால் தொலைதூர கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கங்க்ரா மாவட்டத்தில் உள்ள படா பங்கல் கிராமத்தில் ரவி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அரசு கட்டிடங்கள் அடித்து செல்லப்பட்டன. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. படா பங்கல் கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 7,800 அடி உயரத்தில் உள்ளது. குளிர்காலத்தில் நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு இந்த கிராமம் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும்.
மாநில அவசர கால செயல்பாட்டு மையம் (SEOC) தகவலின்படி மாநிலத்தில் 12 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் 536 சாலைகள் மூடப்பட்டுள்ளன. சம்பா மாவட்டத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அங்கிருந்து எந்த தகவலும் வரவில்லை. மூடப்பட்ட சாலைகளில் 217 சாலைகள் மண்டி மாவட்டத்திலும், 167 சாலைகள் குலு மாவட்டத்திலும் உள்ளன. சுமார் 1,184 மின்மாற்றிகள் மற்றும் 503 குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று SEOC தெரிவித்துள்ளது.
ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 26 வரை ஹிமாச்சல் பிரதேசத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் குறைந்தது 158 பேர் உயிரிழந்துள்ளனர். 38 பேரை காணவில்லை என்று SEOC தெரிவித்துள்ளது. மாநிலத்தில் 90 இடங்களில் வெள்ளப்பெருக்கு, 42 இடங்களில் மேகவெடிப்பு, 85 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ரூ.2,623 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று SEOC தெரிவித்துள்ளது.
அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாக.... ரூ.3000 கோடி ஏற்றுமதி பாதிப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
மாஸ் காட்டும் எடப்பாடி பழனிச்சாமி...அதுக்குள்ள இவ்வளவு விஷயம் பண்ணிட்டாங்களா?
PM Modi Japan Visit: 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
மோடி தலைமையிலான மத்திய அரசு திமுக அரசை விட முன்னோடியாக செயல்படுகிறது: அண்ணாமலை தாக்கு!
மிகப்பெரிய தொழில்துறை பணியாளர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.. டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
இறக்குமதி வரியால் பாதிப்படைந்தவர்களுக்கு வாராக்கடன் விதிகளை தளர்த்த வேண்டும் : எம்.பி.சு வெங்கடேசன்
uncle என விஜய் சொன்னது...டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன பதில்
புற்றுநோய் சுற்றுலாவால் ஹிமாச்சல் பிரதேசம் பாதிப்பு.. இப்படியே போனால்.. நிபுணர்கள் எச்சரிக்கை
2038ல் 2வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும்.. எர்னஸ்ட் அன்ட் யங் தகவல்
{{comments.comment}}