அதானியை தொடர்ந்து ஹிண்டன்பர்க் வலையில் சிக்கப்போவது யார்?: அடுத்த ஷாக்கர்!

Mar 23, 2023,12:03 PM IST
புதுடெல்லி: அதானி குழுமம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம், மற்றொரு புதிய நிறுவனம் பற்றிய அறிக்கையை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த தொழிலதிபரான கவுதம் அதானி, மின்சாரம், ஏர்போர்ட், துறைமுகம் போன்ற பல துறைகளில் கால் பதித்து, வெற்றியும் கண்டார். அதானி குழுமத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டில் இருந்தும் பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. இவரது நிறுவனங்களின் பங்குகளும் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்தது. அதானியின் சொத்து மதிப்பும் அதிகரித்தது. இந்திய பணக்காரர், ஆசிய பணக்காரர் என படிப்படியாக வளர்ந்து, உலக பணக்காரர் பட்டியலில் 2வது இடம் வரை அசுர வளர்ச்சி கண்டிருந்தார். அவரின் வளர்ச்சிக்கு பேரிடியாக விழுந்தது அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை.


ஆய்வறிக்கையால் வீழ்ச்சி

வரி முறைகேடு, செயற்கையாக பங்கு விலையை ஏற்றியது, சொந்தங்களுக்கு முக்கிய பதவி, அதீத கடன் என அதானி குழுமத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியது ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம். மொத்தம் 413 பக்கங்களை கொண்ட இந்த ஆய்வறிக்கை தான், அதானியின் வாழ்க்கையை மொத்தமாக புரட்டிப்போட்டது. அறிக்கை வெளியான ஒரே வாரத்தில் அதானி குழுமத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 50 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது.

அரசியல் தாக்கம்

உலகின் 2வது பணக்காரராக ஜொலித்த கவுதம் அதானி, 35வது இடத்துக்கும் கீழ் தள்ளப்பட்டார். இந்த சரிவில் இருந்து மீளமுடியாமல் திணறிய அதானி நிறுவனங்கள் இப்போதுதான் ஓரளவு மீண்டு வருகின்றன. இந்த விவகாரம் இந்திய அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதானி குழுமத்தின் மீது பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை அமைக்க வலியுறுத்தி பார்லி.,யின் இரு அவைகளையும் தொடர்ந்து முடக்கி வருகின்றன.

அடுத்த அறிக்கை

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையால் நிகழும் இந்த சம்பவங்களே இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள்ளாக அந்நிறுவனம் மற்றொரு ஆய்வறிக்கை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. ஹிண்டன்பர்க் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛விரைவில் புதிய அறிக்கை - மற்றொரு பெரிய நிறுவனம்’ என பதிவிட்டுள்ளது. ஹிண்டன்பர்க் வலையில் அடுத்து சிக்கப்போவது இந்திய நிறுவனமா அல்லது வேறொரு நாட்டின் நிறுவனமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்