சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எழுந்த இசைஞானி இளையராஜா சர்ச்சை குறித்து தமிழ்நாடு அரசின் இந்து அறநிலைத்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜாவை வெளியே அனுப்பியதாகவும், உள்ளே நுழைய கூடாது ஜீயர்கள் தடுத்து விட்டதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையம் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு நாச்சியார் திருக்கோவிலுக்கு 15.12.2024 அன்று இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் வருகை புரிந்ததன் பேரில், 16.12.24 முதல் ஊடகங்களில் வரும் செய்தி குறித்து மேற்படித் திருக்கோவில் செயல் அலுவலர் பார்வை-2 மூலம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் , ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார் திருக்கோயில் இந்து சமய அறநிலைத்துறை சட்டப்பிரிவு 46 கீழ் உள்ள திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலானது முதல் நிலை செயல் அலுவலர் மற்றும் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர் குழு கூட்டுப் பொறுப்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.
பார்வை 2ல் காணும் குறிப்பில், 15.12.2024 அன்று திருக்கோவிலுக்கு ஸ்ரீ ஸ்ரீ தரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமனுஜ ஜீயரண சுவாமிகள் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் சுவாமி தரிசனத்திற்கு திருக்கோயிலுக்கு வருகை புரிந்தனர் என்றும், இத்திருக்கோயிலில் ஆண்டாள் ரெங்கமன்னார், கருடாழ்வார், மூலவர் கருவறையிலும், கருவறையினை அடுத்த அர்த்த மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் உற்சவரும் எழுத்தருளியுள்ளனர். எனவே, இத்திருக்கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை என்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
15.12.2024 அன்று இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உடன் வருகை புரிந்த போது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என கூறிய உடன் அவரும், ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார் என்றும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்ற விவரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}