பாட்னா: மக்களிடையே அதிகரித்துள்ள இந்து என்ற உணர்வு பாஜகவை வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வைக்கும். மிகப் பெரிய வெற்றி கிடைக்கும். ஆனால் மோடி மேஜிக் இந்த முறை பெரும் பங்காற்றாது என்று மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.
பாஜகவுக்குள் இருந்து கொண்டே பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அடிக்கடி கருத்துக்களைக் கூறி வருபவர் சுப்பிரமணியன் சாமி. குறிப்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சிப்பவர். இவரை பாஜக தலைமை பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
இந்த நிலையில் பாட்னாவுக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது லோக்சபாதேர்தலில் பாஜகவின் வாய்ப்பு குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு சாமி பதிலளிக்கையில், மக்களிடையே மிகப் பெரிய அளவில் இந்துத்தவ உணர்வு அதிகரித்துக் காணப்படுகிறது. இந்து என்பது குறித்து பெருமிதம் காட்ட ஆரம்பித்துள்ளனர் மக்கள். அது பாகவை கரையேற்றி விடும். மிகப் பெரிய வெற்றியே கிடைக்கும்.

வருகிற லோக்சபா தேர்தலில் இந்த முறை மோடி மாஜிக் வெற்றி பெறாது, எடுபடாது, அது முடிந்து போய் விட்டது. பாஜகவும் சரி அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸும் சரி தனி நபர்களை நம்பி செயல்படுவதில்லை. சிந்தாந்தமும், அமைப்பும்தான் இங்கு முக்கியமானது, பிரதானமானது.
முதல் முறையாக நாட்டில் உள்ள இந்துக்களிடேயே நாம் இந்துக்கள் என்ற உணர்வு மேலோங்கியுள்ளது. தங்களது அடையாளம் குறித்து பெருமைப்படுகிறார்கள். நேரு காலத்தில் திணிக்கப்பட்ட வித்தியாசமான எண்ணங்களிலிருந்து அவர்கள் விடுபட ஆரம்பித்துள்ளனர். ஆனால் இதற்கெல்லாம் மோடியோ, மற்றவர்களோ காரணம் கிடையாது.
நிதீஷ் குமார் எப்போதுமே நம்மவர்தான். அவர் ஏன் நம்மை விட்டுப் போனார் என்பதுதான் ஆச்சரியமாக இருந்தது. அவர் புத்திசாலி, தவறுகளை கற்றுக் கொண்டு விட்டார். இந்து உணர்வுகளுக்கு எதிராக போவது ஆபத்து என்பதை உணர்ந்து விட்டார். இதனால்தான் பாஜகவுடன் மீண்டும் இணைந்து விட்டார்.
ராகுல் காந்தியும், அவரது தாயாரும் விரைவில் சிறைக்குப் போவார்கள். அதை நான் பார்ப்பேன் என்று கூறினார் சுப்பிரமணியன் சாமி.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}