புனித வாரம் தொடங்கியது.. தமிழ்நாடு முழுவதும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

Mar 29, 2026,12:58 PM IST
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய வாரம், ஒரு கழுதைக் குட்டியின் மீது ஏறி எருசலேம் நகருக்குள் நுழைந்தார். அப்போது அங்கிருந்த மக்கள் தங்கள் ஆடைகளையும், ஈச்ச மரக் கிளைகளையும் (குருத்தோலைகள்) வழியில் விரித்து, "ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுகிறார்!" என்று ஆர்ப்பரித்து அவரை ஒரு அரசரைப் போல வரவேற்றனர். இந்த நிகழ்வையே குருத்தோலை ஞாயிறு நினைவுபடுத்துகிறது.

தேவாலயங்களில் குருத்தோலைகளைப் புனிதம் செய்து, கைகளில் ஏந்தி பாடல்கள் பாடி ஊர்வலமாகச் செல்வார்கள். இந்நாளில் இருந்து இயேசுவின் பாடுகளையும், இறப்பையும் தியானிக்கும் புனித வாரம் தொடங்குகிறது.




பவனியில் பயன்படுத்தப்படும் குருத்தோலைகளைச் சிறு சிலுவைகளாகச் செய்து வீடுகளில் வைத்துக்கொள்வது பலரது வழக்கம். இந்த ஆண்டு பயன்படுத்தப்படும் குருத்தோலைகள் காய்ந்த பிறகு சேகரிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு 'சாம்பல் புதன்' திருநாளில் நெற்றியில் பூசப்படும் சாம்பலாக மாற்றப்படும்.

இது மனத்தாழ்மையின் வெற்றியைப் பறைசாற்றும் நாளாகக் கருதப்படுகிறது. ஒரு மாபெரும் அரசர் குதிரையில் வராமல், அமைதியின் அடையாளமான கழுதையில் வந்ததை இது உணர்த்துகிறது.

தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதும் இன்று குருத்தோலை ஞாயிறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது.

புகைப்படம்: தே. ஜெனிட்டா ரீனா
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்