சென்னை: தமிழக முதல்வர் அவர்களே தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பொய்யைச் சொல்லி துரோகம் இழைத்து கொண்டிருக்கிறீர்கள். தொகுதி மறு சீரமைப்பால் இழப்பு ஏற்படுகிறது என்று இல்லாத தகவலை தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது. உண்மையை நான் வைத்திருக்கிறேன். நீங்கள் எனக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்..
கோவை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலக கட்டடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார். இதன்பிறகு வீடியோ கான்பரன்ஸ் மூலம் திருவண்ணாமலை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்களையும் திறந்து வைத்தார். இதில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச். ராஜா தமிழிசை சௌந்தரராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் அமித் ஷா பேசும்போது கூறியதாவது:
கோவையில் உள்ள உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கிறேன். கோவை மக்களுக்கும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். உலகின் மிகத் தொன்மையான மொழியான தமிழ் மொழியில் என்னால் பேச முடியவில்லையே என்ற வருத்தத்துடன் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு எனது உரையை தொடங்குகிறேன். இன்று பாஜக அலுவலகம் கோவையில் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் திருவண்ணாமலையிலும் ராமநாதபுரத்திலும் நமது அலுவலகம் திறக்கப்படுகிறது. இந்த அலுவலகத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் மற்ற கட்சிகள் எல்லாம் வேலை செய்யும் இடத்தை திறந்து வைப்பார்கள். நாம் தனித்துவமாக பாஜகவின் திருக்கோவிலை திறந்து இருக்கிறோம். இனி வருங்காலத்தில் இந்த மூன்று அலுவலகங்களும் மக்களுடன் இணைந்து மக்களுக்காக பணியாற்றி மக்கள் தொண்டுகளை செய்து மக்கள் எண்ணங்களை பிரதிபலித்து மக்கள் கூடும் இடமாக இந்த இடம் விளங்க வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது பாரத பிரதமர் மோடி அவர்களின் தலைமையின் கீழ் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மிக அற்புதமாக ஒரு பட்ஜெட்டை இப்போது தந்திருக்கிறார். இந்த பட்ஜெட் மூன்று முக்கிய அம்சங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்க மக்கள் இங்கு மிக ஆழமாக கவனிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் நமது அன்புக்குரிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த 2024 ஆம் ஆண்டில் தான் மூன்றாவது முறையாக நாட்டின் தலைமை பொறுப்பிலேயே பொறுப்பேற்று வழிநடத்திக் கொண்டிருக்கிறார். 2024 இல் தான் நாம் முழு மெஜாரிட்டியுடன் ஒடிசாவிலேயே நம் ஆட்சி அமைத்திருக்கிறோம். நீண்ட காலத்திற்குப் பிறகு ஆந்திர பிரதேசத்திலும் நமது என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அரியானா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஹாட்ரிக் வெற்றி பெற்று மக்களின் நன்னம்பிக்கை பெற்ற ஒரே கட்சி பாஜக இன்று மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் தொடக்கம் டில்லி வெற்றியுடன் தொடங்கியது. அதேபோல் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் என் டி ஏ கூட்டணி ஆட்சி பாஜகவின் ஆட்சிதான் தொடங்கும். இங்கு கூடியிருக்கின்ற அத்தனை பாஜக தொண்டர்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டின் அத்தனை தொண்டர்களுக்கும் நான் சொல்லிக்கொள்ளும் கருத்து என்னவென்றால் நாங்கள் வெற்றி பெறும் நேரம் வந்துவிட்டது. திமுகவின் தேசவிரோத ஆட்சி மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர காலம் நெருங்கி விட்டது. எல்லோருக்கும் நான் தெரிவித்துக் கொள்ளப் போகும் கருத்து என்னவென்றால் நீங்கள் அத்தனை பேரும் உற்சாகத்துடன் புத்துணர்ச்சியுடன் உங்கள் உடலுக்கு மேலும் வலு சேர்த்து உங்கள் காலை வலுவாக எடுத்து வையுங்கள். 2026 இல் அறுதியிட்டு கூறுகிறேன் நமது என் டி ஏ ஆட்சி தமிழகத்தில் உருவாக போகிறது. தமிழ்நாட்டில் வேரூன்றி இருக்கிற தேச விரோத சக்தி தேசியத்திற்கு எதிரான சிந்தனைகள் எல்லாம் வேரோடு பிடுங்கி எறியப்படும்.
தமிழ்நாட்டில் உருவாக்கக்கூடிய நம்முடைய ஆட்சியில் புதிய எண்ணங்கள் மட்டுமல்ல புதிய திட்டங்கள், புதிய சிந்தனைகள், புதிய எழுச்சியை உருவாக்கக்கூடிய ஆட்சியாக உருவாகப் போகிற நம்முடைய ஆட்சி அமையப் போகிறது. பாரதப் பிரதமர் மோடி அவர்கள் அவரது ஆட்சி அமைந்த மாநிலங்கள் எல்லாம் தன்னுடைய முத்திரையை தனித்துவமாக பதித்து கொண்டிருக்கிறார். தமிழ் மக்களின் வாழ்வியல், தமிழ் மக்களின் மொழி, வளம், தமிழ் மக்களின் கலாச்சாரம், பண்பாடு, எல்லாவற்றையும் போற்றக்கூடிய ஒரு மாபெரும் தலைவராக பாரத பிரதமர் நமது மோடி அவர்கள் இருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவிற்கு பின்னால் தமிழ் மொழியையும், தமிழ் இலக்கியத்தையும் பண்பாடையும் கலாச்சாரத்தையும் போற்றக்கூடிய மிகச்சிறந்த தலைவராக நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
ஜனநாயக கோவிலாக கருதப்படும் பாராளுமன்றத்தில் நமது மூவேந்தர்கள் கையில் இருந்த செங்கோலை அந்த புனிதமான செங்கோலை கொண்டு அலங்கரிக்க செய்தார். பாராளுமன்றத்திலேயே இதைவிட தனிச்சிறப்பு தமிழுக்கு யாரால் செய்ய முடியும். மொத்த இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்கள் எல்லாவற்றையும் பார்க்கும்போது தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு மிக கேவலமாக சீரழிந்து காணப்படுகிறது. பல்கலைக்கழகம் போன்ற மிக முக்கியமான இடங்களில் கூட நம்முடைய பெண்கள் நம்முடைய சகோதர சகோதரிகள் மானத்தோடு பாதுகாப்பாக சென்று வரக்கூடிய சூழல் இல்லை என்பது மிகவும் மோசமான உதாரணம்.
வேங்கைவயல் சம்பவம் நடைபெற்று 200 நாட்கள் கடந்தும் கூட இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை. இன்னும் அந்த வழக்கு தொங்கிக் கொண்டிருக்கிறது. கள்ளச்சாராயம் புரையோடிக் கிடைக்கிறது. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை பிடிக்காமல் கள்ளச்சாராயம் யார் காய்ச்சிறாங்க என்று கம்ப்ளைன்ட் கொடுக்கின்ற மாணவர்கள் திடீரென்று கொல்லப்படுகிறார்கள். இப்ப தேச விரோத சிந்தனை மட்டும் தான் இங்கு ஆட்சி கட்டிலில் இருக்கிறது. 1998 இல் நடைபெற்ற வெடி குண்டு சம்பவம் இருக்கிறதே, அந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு காரணமானவர்களை கூட இந்த அரசு காவல் பாதுகாப்போடு அழைத்துச் செல்லும் அவல நிலைதான் தமிழகத்தில் இருக்கிறது. கல்லூரி மாணவர்களையும் இளைஞர்களையும் கெடுக்கும் இந்த டிரக் மாபியா கும்பல் கூட ஆட்சியாளர்களின் ஆட்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதே போல கனிமவள கொள்ளை தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மணல் கொள்ளை கூட ஆட்சியாளர்களின் முழு அதிகாரத்தோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஊழல் என்று பார்த்தீர்கள் என்றால் திமுக தலைவர்கள் எல்லாம் மாஸ்டர் டிகிரி பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஒரு தலைவர் பார்த்தா வேலை வாங்கி கொடுப்பதற்காக பணம் வாங்கி சாதனை படைத்திருக்கிறார். இன்னொரு தலைவர் எப்படி என்று பார்த்தால் பண மோசடி மற்றும் செம்மரக் கடத்தலில் வழக்கிலும் மாட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு தலைவர் எப்படி இருக்கிறார் என்றால் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்திருக்கிறார். அதைவிட இன்னொரு தலைவர் நிலக்கரியில் மிகப்பெரும் ஊழல் செய்திருக்கிறார்.
இன்னொருத்தர் 6000 கோடி ரூபாய் சிஆர்ஐடிபி ஊழலில் அவரும் சிக்கியிருக்கிறார். மறக்கவே முடியாத இந்த 2ஜி ஊழல் இன்னும் முடியவில்லை. இது எப்படி இருக்குது என்றால் யார் யாரெல்லாம் ஊழல் செய்கிற உச்சத்தில் இருக்கிறார்களோ அவர்களை தேடித்தேடி திமுக மெம்பர் ஆகவே சேர்க்கும் போலிருக்கிறது. இந்த ஊழல்வாதிகளால் தமிழ்நாடு மிகவும் துயரப்பட்டிருக்கிறது துன்பப்பட்டு இருக்கிறது. இதனால்தான் தன்னுடைய ஆட்சியில் எங்கெங்கு இருக்கின்ற அவலங்கள் வெளிப்பட்டிடக்கூடாது என்பதற்காக தமிழக முதல்வரும் அவருடைய புதல்வரும் ஏதாவது ஒரு விஷயத்தை இவர்களாய் எடுத்து புதுசு புதுசா ஒரு பிரச்சனையை தமிழகத்தில் உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஸ்டாலின் அவர்களே நீங்கள் புதுசு புதுசா ஏதாவது கண்டுபிடிக்கிறீங்க. இத்தனைக்கும் எல்லா கட்சியும் சேர்ந்து மீட்டிங் போட்டு பேச போறீர்களாம். என்னன்னா தொகுதி மறு சீரமைப்பை முக்கிய பிரச்சினையாக உருவாக்குகிறீர்கள். திரு ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் பாராளுமன்றத்தில் மிகத் தெளிவாக சொல்லிவிட்டார். எந்த தென்னிந்திய மாநிலங்களுக்கும் அவர்களுக்கு இருக்க பாராளுமன்ற சீட்டில் ஒன்று கூட குறையாது கூடுதலாக ஆகும் என்று. அவர்கள் மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமல்ல மற்ற விகிதாச்சாரா அடிப்படையில் இந்தியா முழுவதும் விகிதாச்சார அடிப்படையில் அதே உயர்விருக்கும் பொழுது எந்த மாநிலத்திற்கும் ஒரு சீட்டு கூட குறையாது என்பதை நமது பிரதமர் அவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார். இந்த நேரத்தில் நான் அனைவருக்கும் சொல்லிக் கொள்வது தென்னிந்திய மாநிலங்கள் அனைவருக்கும் புதுசாக தொகுதி மறு சீரமைப்பு வழங்கப்படும்.
இந்த புதிய சீட்டுகள் அத்தனையும் எந்த குறைபாடும் இல்லாமல் தலைவர் அவர்கள் கூறியபடி விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கப்படும் அந்த சீட்டில் தென்னிந்திய மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக கூடுதலாக சீட்டுகள் தான் கிடைக்கும் யாருக்கும் எந்த குறையும் ஏற்படாது என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு முதல்வர் அவர்களே நான் தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பொய்யைச் சொல்லி துரோகம் இழைத்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் முன்னாடியே புள்ளி விவரங்களோடு நிற்கிறேன். நீங்கள் இது மாதிரி இல்லாத கற்பனையை இந்த தொகுதி மறு சீரமைப்பால் இழப்பு ஏற்படுகிறது என்பதை தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது. உண்மையை நான் வைத்திருக்கிறேன். நீங்கள் எனக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறீர்கள். எதன் அடிப்படையில் இப்போது ஒரு பொய்யை சொல்கிறீர்கள் என்பதற்கு பதில் கூற வேண்டும்.
2004 முதல் 2014 வரைக்கும் நம்முடைய பத்தாண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் திட்டங்களுக்கு வழங்கப்படும் மானிய தொகை உட்பட கொடுக்கப்பட்ட தொகை ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 901 கோடி ரூபாய். மோடி அவர்கள் ஆட்சியில் 2014 இல் இருந்து 24 வரை நடைபெற்ற போது இதே போல திட்டங்களுக்கான தொகையும் மானிய தொகையும் சேர்த்து ஐந்து மடங்கு கிட்டத்தட்ட அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. யுபிஐ அரசு கொடுத்தது ஒரு லட்சத்து 52 ஆயிரத்து சில்லறை கோடி.ஆனால் மோடி அவர்கள் கொடுத்தது 5,8,338 கோடி. இது மட்டுமல்லாமல் கட்டுமான பணிகளுக்காக ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் அவர்களே நீங்கள் மக்களிடம் பொய் சொல்கிறீர்கள் மோடியின் அரசு எங்களுக்கு நிதி தரவில்லை என்று. நீங்கள் பச்சை பொய்யை சொல்கிறீர்கள். உங்களிடம் நான் தெரிந்து கொள்வது என்னவென்றால் நீங்கள்தான் தமிழ் மக்களுக்கு உண்மையான துரோகத்தை செய்திருக்கிறீர்கள். எய்ம்ஸ்காக 2000 கோடி ரூபாய், நீர்வளத் துறைக்காக ஆயிரம் கோடி ரூபாய் இது இல்லாமல் பேரிடர் நிதிக்காக பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கான ஏராளமான கோடி தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எல்லாம் திமுக ஆட்சியின் அவலங்கள் எல்லாம் மக்கள்கிட்ட எடுத்துட்டு போங்க. திமுக ஆட்சியில் நடத்துகின்ற ஊழல்கள், பெண்களுக்கு பாதுகாப்பின்மை இதெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு வீடுகளுக்கும் நம்முடைய தொண்டர்கள் கொண்டு செல்ல வேண்டும்.
தமிழ் மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் வளங்களுக்காகவும் லட்சக்கணக்கான கோடிகளை பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கி தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், பண்பாடு, என பாடுபட்டுக் கொண்டிருக்கும் நமது மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நீங்கள் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டுபோய் எல்லா திட்டங்களையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் அமித் ஷா.
இதனை தொடர்ந்து வெள்ளியங்கிரி மலை பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று மாலை 6 மணிக்கு மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார் அமைச்சர் அமித்ஷா. அமித்ஷா வருகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அதேசமயத்தில் ஈஷா மையம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2024ம் ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது.. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு.. பரிசுத்தொகையை அள்ளிக் கொடுத்த.. பிசிசிஐ!
தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு.. மழை பிளஸ் வெயில் இதுதான் நிலவரம்..!
டாஸ்மாக் விவகாரத்தில்.. அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க தடை.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு!
கொலை பட்டியல் தான் திமுகவின் சாதனை.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கு!
15 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்த கட்டுப்பாடு விதித்த.. இந்திய எண்ணெய் நிறுவனம்..!
Govt jobs vacancy: போக்குவரத்து துறையில்.. 3,274 காலிப் பணியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
நாதக... இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக... வீரப்பன் மகள் வித்யாராணி நியமனம்
மார்ச் 22.. மக்கள் நீதி மய்யம் .. கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு, நிர்வாகக் குழு கூட்டம்!
{{comments.comment}}