காந்திநகர்: காந்தி நகர் தொகுதியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் காந்திநகர் தொகுதி பாஜகவின் கோட்டையாகவே உள்ளது. முன்னாள் துணை பிரதமரான எல்.கே.அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் போட்டியிட்டு வென்ற தொகுதி இது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக பாஜக குஜராத்தை ஆண்டு வருகிறது. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலம் என்பதால், பாஜக தொடர் வெற்றியை குஜராத்தில் சந்தித்து வருகிறது. கடந்த 2014 மற்றும் 2019ல் நடைபெற்ற லோக்சபா தேர்தல்களிலும் பாஜக அபார வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2024ம் ஆண்டிற்கான தேர்தலில் காந்திநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சரான அமிதஷா போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் சோனால் ராமன்பாய் பட்டேல் போட்டியிட்டார். இந்த தொகுதியில் 12 பேர் களத்தில் இருந்தாலும் அமித்ஷா, சோனால் பட்டேல் இடையே தான் கடும் போட்டி நிலவி வந்தது. இருப்பினும், தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து அமித்ஷாவே முன்னிலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் மதியம் வெளியான அறிவிப்பின் படி அமித்ஷா அபார வெற்றி பெற்றார். காந்திநகரில் அமித்ஷா வெற்றி பெறுவது இது முதல் முறை அல்ல. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 5,57,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}