சென்னை : அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் இன்று ரிலீசாகி உள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் நேரிலும், சோஷியல் மீடியாக்களிலும் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் படத்தின் விமர்சனங்கள் பல விதங்களில் வந்து கொண்டிருக்கிறது. இதனால் விடாமுயற்சி எப்படி இருக்கு? படம் பார்க்கலாமா? வேண்டாமா? என பொதுவான சினிமா ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. விடாமுயற்சி படம் பற்றிய சிம்பிளான விமர்சனத்தை வாங்க பார்க்கலாம்.
டைரக்டர் மகிழ் திருமேனி எழுதி-இயக்கி, அஜித் நடித்துள்ள ஆக்ஷன் த்ரில்லர் படம் தான் விடாமுயற்சி. லைகா புரோடக்ஷக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1997ம் ஆண்டு வெளியான அமெரிக்க படமான பிரேக்டவுன் படத்தின் திரைக்கதையை தழுவி விடாமுயற்சி படம் எடுக்கப்பட்டுள்ளது. அஜர்பைஜானில் மோசமான கும்பலால் கடத்தப்பட்ட தன்னுடைய மனைவி த்ரிஷாவை காப்பாற்ற அஜித் எடுக்கும் முயற்சிகள் தான் விடாமுயற்சி படத்தின் கதை.

அர்ஜூன் என்ற கேரக்டரில் அஜித்தும், கயல் கேரக்டரில் த்ரிஷாவும் நடித்துள்ளனர். படத்தின் டைட்டிலிலேயே "பத்மபூஷண் அஜித்" என திரையில் வந்ததுமே ரசிகர்களின் ஆரவாரம் தியேட்டரில் துவங்கி விடுகிறது. பர்ஸ்ட் ஆஃப் முழுவதும் ஆக்ஷன், த்ரில்லர், அஜித்தின் ரொமான்ஸ் காட்சிகள், அனிருத்தின் பேக்கிரண்ட் பிஜிஎம், பட காட்சிகள் என பட்டையை கிளப்பி உள்ளனர். இன்டர்வலுக்கு முன் வைத்துள்ள ட்விஸ்ட் செம.
இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க சண்டை மட்டும் தான். ஒட்டுமொத்த ஆக்ஷனில் அஜித்தின் கார் ஃபைட் சூப்பர், சிம்பிளான மாஸ் டயலாக் அஜித் வரும் காட்சிகளுக்கு பலமாக உள்ளது. இருந்தாலும் செகண்ட் ஆஃப் சற்று போராக தான் போகிறது. எதிர்பார்த்தபடி இல்லாமல் கொஞ்சம் சுமாராக தான் இருக்கு.
டூப் போடால் நடித்துள்ள அஜித்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், படம் முழுவதையும் தன்னுடைய தோளில் சுமக்கும் அஜித்தின் நடிப்பு, அனிருத்தின் இசை, பட காட்சிகள் ஆகியவை படத்திற்கு மிகப் பெரிய பிளஸ். அனிருத் இசையில் பத்திக்கிச்சு பாடல், சவாதிகா பாடல் மாஸ் காட்டுது. ஆனால் அதிகமான சண்டை காட்சிகள் படத்திற்கு மைனசாக உள்ளது.
மொத்தத்தில் விடாமுயற்சியை பார்க்கலாம் என்பது தான் பொதுவான ரசிகர்களின் விமர்சனமாக உள்ளது. அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு பெரும்பாலான ரசிகர்கள் 5க்கு 3.25 என ரேட்டிங் கொடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!
மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
{{comments.comment}}