காங்கிரஸ் - ஆம் ஆத்மி பஞ்சாயத்து.. தீர்த்து வைத்த மமதா பானர்ஜி, நிதீஷ் குமார்

Jul 17, 2023,12:46 PM IST
பாட்னா: டெல்லி அரசுக்கு   எதிரான மத்தியஅரசின் அவசரச் சட்டத்தை எதிர்ப்பதாக காங்கிரஸ் பகிரங்கமாக அறிவித்ததன் பின்னணியில்,  திரினமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்வருமான மமதா பானர்ஜி இருப்பதாக கூறப்படுகிறது.

அவசரச் சட்டத்தை எதிர்க்கும் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே பூசல் இருந்து வந்தது. இதனால் இன்றைய பெங்களூர் எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு ஆம் ஆத்மி வருமா என்ற சந்தேகமும் நிலவியது. இந்த நிலையில்தான் அவசரச் சட்டத்தை  எதிர்ப்பதாக நேற்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து பெங்களூர் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்கும் என்று அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டது.



காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே நிலவி வந்த பிரச்சினையை சரி செய்தது மமதா பானர்ஜியும், பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும்தான் என்று தற்போது தெரிய வந்துள்ளது.  கடந்த பாட்னா கூட்டத்திலேயே இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்சினை வெடித்தது. அப்போதும் மமதா பானர்ஜிதான் தலையிட்டு சமரசம் செய்தார். இப்போதும் அவரே இரு தரப்பிடமும் பேசி சரி செய்துள்ளாராம்.

காங்கிரஸ் தலைவர்களைத் தொடர்பு கொண்ட மமதா பானர்ஜி, டெல்லி அவசரச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காவிட்டால் நிச்சயம் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வலுவடையாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். மல்லிகார்ஜூன கார்கேவிடமே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.இதேபோல நிதீஷ் குமாரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவைத் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்துதான் அவசரச் சட்டத்தை எதிர்ப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இதைத் தொடர்ந்து பெங்களூர் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்போம் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்தது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்