- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: கீரைகளிலேயே சிறந்த கீரை எது தெரியுமா?.. தெரியலையா.. சரி, அது கிடக்கட்டும்.. நாம இப்ப அரைக்கீரையைப் பற்றிப் பார்ப்போம். அரைக்கீரை புளி கடையல் செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா.. சூப்பரா இருக்கும் தெரியுமா.. அதை விட முக்கியமானது, ஹெல்த்தியான டிஷ் இது.
சரி வாங்க, டைம் வேஸ்ட் பண்ணாம கிச்சனுக்குள் போய்ருவோம்.

தேவையான பொருட்கள்
1. அரைக்கீரை ஆய்ந்தது ஒரு பெரிய 1 கப்.
2. சிறிய வெங்காயம் 6 உரித்தது.
3. பூண்டு ஆறு பல்
4. சீரகம் ஒரு ஸ்பூன்
5. தக்காளி 1 கட் செய்யவும்
6. வர மிளகாய் 4 .
7. நல்லெண்ணெய் 4 ஸ்பூன்.
8. வெந்தயம் 1/4 ஸ்பூன்
9. புளி அரை நெல்லி சைஸ்
10. உப்பு காரம் தேவைக்கு ஏற்ப
செய்முறை:
ஒரு கடாயில் அரைக்கீரை ஆய்ந்து கழுவியது போடவும். அதனுடன் சிறிய வெங்காயம் , பூண்டு, வர மிளகாய், சீரகம், புளி , தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும் . இவை அனைத்தும் ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் பல்ஸ் மோடில் கொரகொரப்பாக அரைக்கவும். அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சிறிய வெங்காயம் பூண்டு தட்டிக் கொண்டு அதனுடன் போடவும்.
சீரகம் வரமிளகாய் அதனுடன் போடவும். வெந்தயம் போடவும் பிறகு மிக்ஸியில் போட்ட கீரையை எண்ணெயில் போட்டு நன்றாக கிளறவும். நல்லெண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
சூடான சாதத்துடன் அரைக்கீரை புளி கடையல் அருமையாக இருக்கும். வேலைக்கு செல்பவர் லஞ்ச் பாக்ஸிலும்,கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பிடித்தமான கடையல்உணவு.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}