போர்ச் சூழலை குழந்தைகளுக்கு எப்படி விளக்குவது? – பெற்றோருக்கான 15 வழிகாட்டுதல்கள்

Mar 30, 2026,05:31 PM IST

- தெ.நாராயண லெட்சுமி, B.E


சில சமயங்களில் போர், இயற்கைச் சீற்றம் அல்லது அச்சம் தரும் செய்திகள் போன்றவை குழந்தைகளுக்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக டிவி, மொபைல், சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் குழந்தைகளுக்கு குழப்பத்தையும் பயத்தையும் தரலாம். இப்படிப்பட்ட சூழலில் பெற்றோர் அமைதியாகவும் புரிதலுடனும் குழந்தைகளிடம் பேசுவது மிகவும் முக்கியம்.


குழந்தைகள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் இருக்க, பெற்றோர் செய்யக்கூடிய 15 முக்கியமான டிப்ஸ்கள்..


1. குழந்தை கேட்கும் கேள்விகளை கவனமாக கேளுங்கள்


முதலில் அவர்கள் என்ன புரிந்திருக்கிறார்கள், என்ன கேள்விகள் இருக்கிறது என்பதை அமைதியாக கேட்டு புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளை அமைதியாக செவி மடுங்கள்.


2. வயதிற்கு ஏற்றவாறு விளக்குங்கள்


குழந்தையின் வயதுக்கும் புரிதலுக்கும் ஏற்ப எளிய வார்த்தைகளில் பேசுங்கள். அதிகமான பயம் தரும் விவரங்களை தவிர்க்கலாம்.


3. உண்மையை மறைக்காமல், மென்மையாக சொல்லுங்கள்




“எதுவும் இல்லை” என்று சொல்லாமல், உண்மையை மெதுவாகவும் அவர்களுக்குப் புரியும் வகையிலும் விளக்குவது நல்லது.


4. அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வு கொடுங்கள்


நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். பயப்படத் தேவையில்லை என்ற நம்பிக்கையையும் ஊட்ட வேண்டும்.


5. அவர்களின் உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்


பயம், கவலை, குழப்பம் ஆகிய உணர்வுகள் அவர்களுக்கு வரலாம். அதை குறைத்து மதிப்பிடாமல், புரிந்துகொள்ளுங்கள்.


6. செய்திகளை அளவாகவே பார்க்கச் செய்யுங்கள்


அதிகமாக நியூஸ் அல்லது சமூக வலைதளங்களை பார்க்க விடாதீர்கள். அது குழந்தைகளுக்கு unnecessary anxiety தரலாம்.


7. அமைதியான சூழலை உருவாக்குங்கள்


வீட்டில் அமைதியான மற்றும் நம்பிக்கை தரும் சூழல் இருந்தால் குழந்தைகள் பாதுகாப்பாக உணர்வார்கள். வெளியில் பிரளயமே ஏற்பட்டாலும் கூட வீடு அமைதியாக இருப்பது குழந்தைகளுக்கு சவுகரியமான உணர்வைக் கொடுக்கும்.


8.  கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லுங்கள்


குழந்தைகள் ஒரே கேள்வியை பலமுறை கேட்டாலும் பொறுமையாக பதில் சொல்ல வேண்டும்.


9. தினசரி வழக்கத்தை தொடருங்கள்


பள்ளி, விளையாட்டு, உணவு நேரம் போன்ற வழக்கமான routine குழந்தைகளுக்கு மனநிலையை சீராக வைத்திருக்க உதவும்.


10. நல்ல செயல்களை பற்றி பேசுங்கள்


மக்கள் ஒருவருக்கொருவர் உதவுவது, சமாதானம் கொண்டு வர முயற்சிப்பது போன்ற நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லுங்கள்.


11. குழந்தைகளை பேச ஊக்குவிக்குங்கள்


அவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன உணர்கிறார்கள் என்று சொல்ல ஊக்குவியுங்கள்.


12. பயம் அதிகமாக இருந்தால் கவனிக்கவும்


அதிகமாக பயம், தூக்கமின்மை, அல்லது நடத்தை மாற்றம் இருந்தால் அதை கவனிக்க வேண்டும். அதை சரி செய்ய முயலுங்கள்.


13. சமூக உணர்வை வளர்த்திடுங்கள்


மற்றவர்களுக்கு உதவுவது, கருணை காட்டுவது போன்ற மனிதநேயத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.


14. நீங்கள் அமைதியாக இருங்கள்


முதலில் நீங்கள் டென்ஷன் ஆகாமல் இருங்கள். பெற்றோர் அமைதியாக இருந்தால், குழந்தைகளும் அதே உணர்வை பெறுவார்கள்.


15. நம்பிக்கை கொடுங்கள்


இது சும்மா.. சீக்கிரம் சரியாகி விடும்.. எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்கு அளிப்பது மிக முக்கியம்.


போர் அல்லது நிச்சயமற்ற சூழ்நிலைகள் குழந்தைகளுக்கு பயத்தை ஏற்படுத்தலாம். ஆனால் பெற்றோரின் அன்பும் ஆதரவும் இருந்தால், குழந்தைகள் அந்த சூழலை புரிந்துகொண்டு மனவலிமையுடன் வளர முடியும். பெற்றோர் கொடுக்கும் நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் குழந்தைகளின் மனநலத்திற்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கும்.


(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இசைஞானி என்னும் இசைத்தோணி!

news

அழகும் உண்டு.. வழிபாட்டுக்கும் உகந்தது.. அது என்ன பூ.. அதுதாங்க அரளிப்பூ!

news

Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)

news

என் உயிர் உனக்காக... உண்மை...ப்ளீஸ் ரதி .. அவளின் (ல்) அவன்! (18)

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

பாஜக.,வில் இருந்து விலகினார் அண்ணாமலை?.. புதிய கட்சி துவங்க போவதாக தகவல்

news

தமிழை நேசிப்போர்க்கும்.. சுவாசிப்போர்க்கும்.. யோசிப்போர்க்கும்.. தென் தமிழ்!

news

இசை உலகின் மகுடம்.. இசைஞானி இளையராஜா பிறந்த நாளுக்கு பிரபலங்கள் வாழ்த்து