- வே.தங்கப்பிரியா
அருப்புக்கோட்டை: சுடச் சுட நெய் சாதம் வச்சு சாப்பிட்டிருக்கீங்களா.. அதுவும் குழந்தைகள் இதை விரும்பிச் சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு அருமையான டிப்ஸுடன் வந்திருக்கோம். வாங்க கிச்சனுக்குள் போகலாம்.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி-2 டம்ளர்
நெய்-1/3 கப்
பெரிய வெங்காயம் -1
பட்டை, கிராம்பு ஏலக்காய் -தாளிப்பதற்கு மட்டும்
தக்காளி -1
கொத்தமல்லி,புதினா-தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது -1 ஸ்பூன்
தண்ணீர் -4 டம்ளர்
உப்பு -தேவையான அளவு
செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். குக்கரை அடுப்பில் வைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் கொத்தமல்லி,புதினா சேர்த்து தக்காளியையும் சேர்த்து நிறம் மாறாமல் நன்கு வதக்க வேண்டும்.
பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து குக்கரில் சேர்க்கவும். இதோடு தண்ணீர் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வைத்து பின் சிறு தீயில் ஏழு நிமிடங்கள் வேகவிட்டு இறக்கினால் ருசியான நெய் சாதம் தயார் .
நெய் சாதம் சாப்பிட்டால் உடலுக்கு சிறந்த ஆற்றல் கிடைக்கும். செரிமான சக்தி அதிகரிக்கும். மூளை மற்றும் நரம்பு மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சருமம் பளபளப்பாக இருக்க உதவுகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும். இது குழந்தைகள் மற்றும் கடின உழைப்பு செய்பவர்களுக்கு மிகவும் நல்லது.
மலச்சிக்கலை போக்க உதவுகிறது. குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நெய்யில் உள்ள கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் (A,D,E,K) மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. மேலும் நெய் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.. இதை அளவாக உட்கொண்டால் ஆரோக்கியமான உணவாக அமைகிறது. குறிப்பாக குளிர் காலங்களில் இதை சாப்பிட்டால் உடல் சூட்டை தணிக்கலாம்.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் மற்றும் கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி இதை அளவாக உட்கொள்ள வேண்டும்.
(வே.தங்கப்பிரியா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நாமும் உணரும் திறனும்.. (Our sensitivity)
தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!
சுடச் சுட.. சுவையான நெய் சாதம் ரெடி.. குழந்தைகளே வாருங்கள் ருசிக்கலாம்!
தொழுதேத்தும் பத்மநாபன்.. யாதவ குல திலகன்.. மதுசூதனன் மாயன்!
தமிழன் என்றாலே வீரம்.. அந்த வீரத் திமிருக்கு சொந்தக்காரன்.. முறுக்கு மீசைக்காரன் பாரதியார்!
பச்சை பயிறு ஈரல் கிரேவி.. சத்தியமா நம்புங்க.. இது சைவ மெனுதான்.. என்னங்க சொல்றீங்க!
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}