- J.லீலாவதி
மேட்டுப்பாளையம்: பச்சை பயிறு ஈரல் கிரேவி.. பெயரைக் கேட்டதும் சும்மா அதிருதா.. ஆனால் சத்தியமா சொல்றேங்க.. இது சுத்தமான சைவ சாப்பாடுதான்.
அதெப்படிங்க ஈரல்னு பேர் வச்சுட்டு அதைப் போய் சைவம்னு சொன்னா எப்படி என்றுதானே கேக்கறீங்க.. அங்கதாங்க இருக்கு டிவிஸ்ட்டு.. வாங்க தொடர்ந்து படிங்க.
தேவையான பொருட்கள்

பச்சை பயிறு தேவையான அளவு
தேங்காய்
பட்டை
கிராம்பு
இஞ்சி பூண்டு விழுது
கொத்தமல்லி
புதினா
ஆயில்
சிக்கன் மசால் அல்லது மட்டன் மசால் (நல்லா படிங்க.. சிக்கன் மசால்தான், மட்டன் மசால்தான்.. ஆனால் சிக்கன், மட்டன் கிடையாது)
பச்சை பயிரை 15 நிமிடம் ஊற வைத்து ஊறிய பச்சை பயிரை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
அரைத்த பச்சை பயிரை இட்லி வேகவைக்கும் சட்டியில் உள்ள தட்டில் ரொட்டி போல் தட்டி வைத்து வேக வைக்கவும். வெந்ததும் வேற தட்டில் மாற்றி ஈரல் வடிவில் வெட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காய் பட்டை கிராம்பு தக்காளி வெங்காயம் அரைத்து வைத்துக் கொள்ளவும்
செய்முறை
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி ரெண்டு பட்டை இரண்டு கிராம்பு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். அரைத்த தேங்காய் விழுதை இதில் சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும். இதில் வெட்டி வைத்த ஈரல் துண்டுகளை (அதாவது பச்சைப் பயிரை) சேர்க்கவும்.
ஈரல் சிக்கன் சுவையில் வேண்டுமென்றால் சிக்கன் மசாலாவையும் மட்டன் சுவையில் வேண்டுமென்றால் மட்டன் மசாலாவையும் சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். ஈரல் வேக நிறைய நேரம் தேவையில்லை. இதை இறக்கும் பொழுது கொத்தமல்லி புதினா தூவி இறக்கவும்.
சாதம், சப்பாத்தி, இட்லி போன்ற அனைத்திற்கும் சேர்த்துக் கொள்ளலாம். மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
என்னங்க இப்ப நம்பறீங்களா.. இது சுத்தமான சைவ மெனு என்பதை.. சாப்பிட்டுப் பாருங்க.. நான்வெஜ் தோத்துப் போய்ரும் சுவையில்!
படம் உதவி: Salem Padma's Samayal/Youtube Channel
(J.லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
தவெக சட்டசபை தலைவராக விஜய் தேர்வு.. நாளை மறு நாள் முதல்வராகப் பதவியேற்பு?
TVK needs 117: தவெக பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கை 118 அல்ல.. 117!
பெரும்பான்மை பெறாத தவெக.. அடுத்து என்ன நடக்கும்.. ஆளுநர் என்ன முடிவெடுப்பார்?
TVK Govt: ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆதரவு தரப் போவது யார்.. யாரெல்லாம் ரெடியா இருக்கா?
Mango Thokku Tips: செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடியில் செமையான.. கிளிமூக்கு மாங்காய் தொக்கு!
அடுத்து என்ன செய்யலாம்? தவெக முதல் அதிமுக வரை...தீவிர ஆலோசனையில் கட்சிகள்
திமுகவை விட 17.43 லட்சம் வாக்குகளே தவெக கூடுதலாகப் பெற்றுள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
4 தொகுதிகளில் NDA.,வின் வெற்றியை பதம் பார்த்த சசிகலாவின் 'அஇபுதமுக'
Vijay Vs Udayanidhi Stalin: தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி ஸ்டாலின்?
{{comments.comment}}