- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: வெளில நல்லா மழை பெய்யுது.. சூடா டீ சாப்பிட்டுட்டே.. அப்படியே இளையராஜா பாட்டு கேட்டுட்டே.. இப்படியே இருந்தா எப்படிப்பா.. மத்தியானம் ஆயிருச்சு.. பசிக்கும்ல.. கரெக்ட்!
பசிக்கும்போது, அதுவும் இந்த மழை நேரத்துல பசிக்கும் போது, சூடா சாதம் வடிச்சு, அப்படியே கொள்ளு ரசம் வச்சு சாப்ட்டா எப்படி இருக்கும் தெரியுமா.. அட நல்லாத்தாங்க இருக்கும்.. வாங்க கொள்ளு ரசம் எப்படி வைக்கணும்னு முதல்ல பார்க்கலாம்.. கிச்சனுக்குள்ள குடுகுடுனு ஓடியாங்க!
தேவையான பொருட்கள்
கொள்ளு - 1 கப்
மிளகு, சீரகம் வரமல்லி, கடலைப்பருப்பு - தலா ஒரு ஸ்பூன்
வர மிளகாய் - 3 + 2
வெந்தயம் - கால் ஸ்பூன்
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு (தண்ணீரில் கரைத்து வைக்கவும்)
பெருங்காயம், மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லித்தழை - ஒரு கைப்பிடி
எண்ணெய், கடுகு, உப்பு -ஒரு ஸ்பூன்
செய்முறை
1. கொள்ளு +3 கப் தண்ணீர் ஊற்றி + பெருங்காயம் + உப்பு + மஞ்சள் போட்டு குக்கரில் வேக வைக்கவும் (நான்கு அல்லது ஐந்து விசில் விடவும்)
2. ஆறிய பிறகு கொள்ளு தண்ணீரை வடித்துக் கொள்ளவும்
3. டிரை வாணலியில் வறுத்து பொடி செய்ய வேண்டியவை - கடலைப் பருப்பு, வரமிளகாய் + வர மல்லி + வெந்தயம் + சீரகம் + மிளகு கறிவேப்பிலை வறுத்து பொடி செய்யவும் (மிக்ஸியில்)
4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு + உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். வர மிளகாய் 2, சீரகம், மிளகு வறுத்த பொடியை போட்டு சிம்மில் வறுக்கவும்
5. புளிக் கரைசல் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
6. புளி வாசம் போன பிறகு கொள்ளு தண்ணீர் ஊற்றி நுரை கட்டியதும் அடுப்பை அணைத்து விடவும்
இந்த ரசத்தை சர்விங் பவுலுக்கு மாத்திட்டா கமகமன்னு கொள்ளு ரசம் ரெடி.. வச்சு சாப்பட்டு பாருங்க.. மழையை நிக்காமல் இன்னும் கொஞ்சம் பெய்யேன் என்று சொல்லத் தோன்றும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒற்றைக் கொம்போனே.. ஓர்கணிக்கு அம்மையப்பனை சுற்றி வந்து பெற்றவனே!
எலிகள் செய்யும் பூஜை.. விநாயகரின் செம டான்ஸ்.. ஏஐயில் கலக்கும் பிள்ளையார் வீடியோக்கள்!
காதலிப்பதாக இருந்தால்.. இதயம் முரளி மாதிரி இருக்காதீங்க.. சீனத்து லியூ போல போட்டு உடைச்சிருங்க!
பிள்ளையாரை வழிபட சிறந்த நைவேத்தியங்கள் என்னென்ன.. விநாயகர் சதுர்த்தி சிறப்புகள்
அன்புள்ள அம்மா.. அருமையான அப்பா!
ஜம்மு காஷ்மீரை உலுக்கி எடுத்த கன மழை.. வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் சென்ற 5 பக்தர்கள் பலி
தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
விஜய் வேஷம் கலைந்து விட்டது... விரைவில் காலி பெருங்காய டப்பா போல் ஆகி விடுவார்: அமைச்சர் சேகர்பாபு
திமுக-அதிமுக...எத்தனை இடங்களில் போட்டியிட்டால்.. கூட்டணி ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்கலாம்?
{{comments.comment}}