- அகிலா
என்னதான் சமைப்பது.. திரும்பத் திரும்ப சாம்பார், வத்தக்குழம்பு, புளிக்குழம்பு.. ரிப்பீட்டு என்று பலரும் அலுத்துக் கொள்வதை வீடுகளில் பார்க்கலாம்.
இப்படிப்பட்டவர்களின் நாக்குகளை திருப்திப்படுத்துவதற்காகவே தினசரி மெனக்கெட்டு யோசித்து யோசித்து வித்தியாசமாக எதையாவது சமைக்க இல்லத்தரசிகள் போராடுவதையும் தினசரி பார்க்கலாம்.
கவலையை விடுங்க.. உங்களுக்காக ஒரு புது ரெசிப்பியுடன் வந்துள்ளோம்.. அவ்வப்போது இதையும் செஞ்சு கொடுங்க. நாக்குச் சப்புக் கொட்டி சாப்பிடுவார்கள். அதுதாங்க கொத்தமல்லி தொக்கு.
முதல்ல ஒரு கடாயில் நாலு ஸ்பூன் கடுகு , ஒரு ஸ்பூன் வெந்தயம் நல்ல ட்ரை ரோஸ்ட் பண்ணி எடுத்து வச்சுக்கோங்க. அப்புறம் கடாயில் கொஞ்சமா எண்ணெய் ஊத்தி இரண்டு கட்டு கொத்தமல்லியை நல்லா அலசி சுத்தம் பண்ணிட்டு அதை அப்படியே வதக்கிங்க.

பிறகு ரெண்டு எலுமிச்சை சைஸ் புளியை ஊற வச்சு அப்படியே எடுத்து வச்சுக்கோங்க. இப்போ ஒரு மிக்ஸி ஜார்ல ட்ரை ரோஸ்ட் பண்ண கடுகையும் வெந்தயத்தையும், நல்ல பவுடரா அரைச்சு, வேறொரு கப்புல எடுத்து வச்சுக்கோங்க. இப்போ கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊத்தி 15 காஞ்ச மிளகாய் நல்ல வறுத்துக்கோங்க. இப்போ மிக்ஸி ஜார்ல வதக்கி வச்சிருக்க கொத்தமல்லி இரண்டு எலுமிச்சை சைஸ் புளி அப்படியே சேர்த்துக்கோங்க.
கொஞ்சம் உப்பு, வறுத்து வச்சிருக்க காஞ்ச மிளகாய் சேர்த்து தண்ணி விடாம அரைச்சுக்கோங்க. இப்போ மறுபடியும் கடாயில் எண்ணெய்யை ஊத்தி கொஞ்சம் தாளிப்பு பொருட்களான கடுகு ,உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, போட்டுக்கோங்க கொஞ்சம் நறுக்குன சின்ன வெங்காயம், 10 பல் பூண்டு சேர்த்து நல்லா வதக்கிக்கோங்க. பிறகு அரைச்சு வச்சிருக்க அந்த ட்ரை ரோஸ்ட் பவுடர் ,அப்புறம் கொத்தமல்லி பேஸ்ட் எல்லாத்தையும் சேர்த்து நல்லா வதக்கிக்கோங்க.
பைனலா சூப்பர் டச்சுக்கு கொஞ்சமா வெல்லத்தை சேர்த்து ஒரு ரெண்டு திருப்பி, திருப்பிட்டீங்கன்னா சுவையான கொத்தமல்லி தொக்கு தயார்ங்க.. இதை மட்டும் செஞ்சு கொடுங்க.. எங்க மம்மி போல வருமான்னு உங்க பிள்ளைங்க உங்களைக் கொஞ்சுவாங்க பாருங்களேன்!
(அகிலா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்
ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!
ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!
புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?
{{comments.comment}}