- கவிஞர் க. முருகேஸ்வரி
பல ஊர்களிலும் பிரபலமாக இருப்பது சிக்கன் பிரியாணி. அதற்கு அடிமையானவர்கள்தான் அதிகம். சுவைக்கு அடிமை ஆகாதாவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட பிரியாணி ஒவ்வொரு ஊரிலும் ஒரு சுவையுடன் வலம் வருகிறது.
இது கன்னியாகுமரி ஸ்டைல் பிரியாணி. செய்து பாருங்க.. அசந்து போய்ருவீங்க.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் -1 /2கி
தக்காளி -1/2கி
பட்டை சோம்பு பாக்கெட்-1
கசகசா, சோம்பு, சீரகம் -தலா 1 டீஸ்பூன்
புதினா-1 கட்டு
கொத்தமல்லி கறிவேப்பிலை- தேவையான அளவு
காய்ந்த மிளகாய்-2
பச்சை மிளகாய்-4
சிக்கன்-1/2கி
பிரியாணி அரிசி -1/2கி
தயிர் -1 கப்
தேங்காய் -1/2 முடி
முந்திரி _10
இஞ்சி பூண்டு-தேவையான அளவு
செய்முறை

ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதனுடன் சிறிதளவு நெய் ஊற்றிவிட்டு பட்டை சோம்பு வாசனைப் பொருட்கள் சேர்த்துக் கொள்ளவும் ... அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் சிறிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்க வேண்டும் .அதன் பிறகு புதினாவையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதனுடன் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும் .
பின்னர் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை அதில் சேர்த்து நன்கு வேக விடவும். நன்கு வெந்த பிறகு அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனையும் சேர்த்துக் கொள்ளலாம். அரை கப் தயிரை அதில் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும். பின்னர் ஒரு ஸ்பூன் மல்லித்தூள் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து விட்டு ...ஒரு ஸ்பூன் சீரகம் ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து நன்கு பவுடர் செய்து அதையும் அதில் சேர்த்துக் கொள்ளவும் பின்னர் சிறிதளவு குழம்பு மிளகாய் தூளையும் அதில் சேர்த்து மூடி வைக்கவும்.
அதில் ஊற வைத்திருக்கும் பிரியாணி அரிசியை சேர்த்து அதனுடன் அரை மூடி தேங்காயை அரைத்து தேங்காய் பாலையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சிம்மில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக விடவும் .விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து விசில் அடங்கியவுடன் மூடியை திறக்கவும்.
அதில் அரை எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு அரைத்த முந்திரி விழுது,இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கிளறி மீண்டும் மூடி வைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி அதில் தூவி பரிமாறினால் சுவையான கமகமக்கும் சிக்கன் பிரியாணி ரெடி.(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்.. மக்கள் ஆதரவு யாருக்கு? யார் வென்றால் என்ன நடக்கும்?
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் உத்தரவு
தமிழகத்தில் இதுவரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்
தென்தமிழ் தலையங்கம்: வற்றிப்போகும் பிரான்சும் வறண்டுவரும் பூமியும்!
பிரபல நடிகர் நானா படேகர் மறைவு: பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு இரங்கல்
Prabha's Tips: பொரித்த ரசம்.. அப்படீன்னா.. அதாவது புளி இல்லாத ரசம்!
Navajothi Arun Poem: அன்னைக்கோர் வாழ்த்து!
ரீல்ஸ் நமக்கு தேவையா?
பிரியாவிடை!
{{comments.comment}}