சென்னை: ஹாய் பிரண்ட்ஸ்.. எப்படி இருக்கீங்க.. ரொம்ப நாளாச்சுல்ல.. ஸாரி! காலையில் பொழுது விடியும் போது பலருக்கும் டீ, காபியோட தான் நாள் ஆரம்பிக்கும். நம்மில் பல பேர் டீ, காபி குடிச்சா தான் பிரஷ்ஷா சுறுசுறுப்பா இருக்குன்னு சொல்வாங்க. அதுவும் ஆபீஸ், கடைகள்னு எந்த வேலை செய்றவங்களா இருந்தாலும் அடிக்கடி டீ குடிப்பாங்க. அப்படி டீ டெய்லி லைப்ல தவிர்க்க முடியாத ஒன்று ஆயிடுச்சு.
"டீ" ல நிறைய வெரைட்டி இருக்குங்க.. இஞ்சி டீ, ஏலக்காய் டீ, மசாலா டீ, பிளாக் டீன்னு. ஆனா தம் டீ கேள்விப்பட்டிருக்கீங்களா? தம் பிரியாணி தெரியும்? அது என்ன தம் டீன்னு தான நினைக்கிறீங்க. இப்ப டிரெண்டிங்கில் இருக்கிறது தாங்க இந்த தம் டீ. சரி , தம் டீ எப்படி ப்ரிப்பேர் பண்றதுன்னு பாப்போமா, வாங்க.

தம் டீ செய்ய தேவையான பொருட்கள்:
டீ தூள்-3 ஸ்பூன்
பட்டை-2 துண்டு
கிராம்பு -4
ஏலக்காய் -4
பால்-1 டம்ளர்
சர்க்கரை- 2 ஸ்பூன்
தண்ணீர்-1 டம்ளர்
செய்முறை: ஒரு குக்கரில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் ஒரு டம்ளரில் வெள்ளை துணியை விரித்து அடிப்பகுதியை நூல் கொண்டு கட்டிக் கொள்ளவும். பின் வெள்ளை துணியின் மேல் பகுதியில் டீ தூள், பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வைத்து இறக்கவும். பின்னர் குக்கரை திறந்து துணியில் உள்ள டீ டிகாஷனை நன்றாக வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பின்னர் காய்ச்சிய பாலில் டீ டிகாஷனை சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொதி வந்ததும் இறக்கினால் சுவையான தம் டீ ரெடி.

நல்ல திக்கான டீ, குடிக்கிறதுக்கு அவ்வளவு டேஸ்டா இருக்குங்க.. வித்தியாசமான இந்த முறையில் டீ செய்து பாருங்கள், அப்புறம் இப்படித்தான் உங்க வீட்ல தினமும் டீ போட சொல்லி கேட்பாங்க. ஓகே தோழிகளே, ட்ரெண்டிங் டீயை செய்து, அருந்தி மகிழுங்கள்.
மீண்டும் சந்திப்போம்.
புகைப்படங்கள்: செளந்தரபாண்டியன்
நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி தருவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
கருகிய மலர்.. வாடாத வாசம்.. அவள்.. Burnt flower!
கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
தைப்பூசத் திருவிழா.. சென்னிமலையில் கோலாகலம்.. நாளை கொடியேற்றம்
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பதிவு!
{{comments.comment}}