சென்னை: உடம்பு ரொம்ப வெயிட் போட்டிருச்சு.. தொப்பை பார்க்கவே கடுப்பா இருக்கு.. என்னதான் டயட்டை பாலோ செய்தாலும் உடம்பு குறையவே மாட்டேங்குது என்று பலரும் புலம்புவதைப் பார்த்திருப்போம்.
உண்மையில் வெறும் டயட்டை பாலோ செய்தால் மட்டும் உடம்பு குறையாதுங்க.. அதையும் தாண்டி வேறு சில பழக்க வழக்கங்களையும் நாம் கையில் எடுக்க வேண்டும். எல்லாம் சேரும்போதுதான் நாம் நினைக்கும் ரிசல்ட் கிடைக்கும்.
முதலி்ல ஆரோக்கியமான உணவு பழக்கங்களைத் தொடங்குங்கள். வெறும் சோறு, இட்லி, தோசை என்று சாப்பிடுவதை முதலில் கைவிடுங்கள். அதிகமாகப் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உட்கொள்ளுங்கள். எண்ணெய், சர்க்கரை மற்றும் உப்பின் அளவைக் குறைக்கவும். இது மிக முக்கியம்.
தினமும் மூன்று பெரிய உணவுகளையும், இடையில் சிறிய ரக உணவுகளையும் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். இதனால் சரிவிகித உணவை எடுப்பதை உறுதி செய்ய முடியும். அதற்காக வயிற்றை அடைத்துக் கொண்டு சாப்பிடும் பழக்கத்தை கடைப்பிடிக்காதீங்க. பசித்தால் மட்டுமே சாப்பிடுங்க.
நொறுக்குத் தீனிகளுக்கு விடை கொடுங்க. முறுக்கு, வடை, மிக்சர் என வயிற்றுக்குள் தள்ளினால் உடல் எடை மட்டும் கூடாது கூடவே வயிற்றுப் பிரச்சினைகளும் போனஸாக கிடைக்கும். அதற்குப் பதில், பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அதிகமாக உபயோகிக்கவும்.
வெயில் காலம் வந்தாச்சு. கூலா கோலா குடிக்கலாமே என்று வாய் கேட்கும்.. அப்படிக் கேட்கும் வாயில் ஒரு போடு போட்டு அதற்குத் தடை விதித்து விடுங்கள். கோலா, பேக்ட் பழச்சாறு போன்றவற்றை விட்டு விட்டு இளநீர், பதநீர் போன்ற இயற்கை பானங்களை அருந்தலாம்.
இப்ப உடற்பயிற்சிக்கு வருவோம். தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். அதிகபட்சம் ஒரு மணி நேரம் செய்யலாம். இவை உங்களது உடல் திறனைப் பொறுத்தது. நடைபயிற்சி, ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல் அல்லது யோகா போன்றவற்றை முயற்சிக்கவும். நன்கு வியர்க்கும் வகையில் உடற்பயிற்சி இருக்க வேண்டும். உங்களது வயது, உடல் தகுதி, ஹெல்த் உள்ளிட்டவற்றைப் பொறுத்து இதை முடிவு செய்யுங்கள். உரிய நிபுணர் ஆலோசனை முக்கியம்.
சுறுசுறுப்பாக உங்களது நேரங்களை செலவிடுங்கள். ஒரு நாளில் 7-8 மணிநேரம் தூங்குங்கள். அதிகாலையில் விழிப்பது நல்லது. அதேபோல இரவு சீக்கிரமே தூங்கப் போவது அதை விட நல்லது. அப்போதுதான் நல்ல தூக்கம் கிடைக்கும், உடலுக்கு ஓய்வு கிடைக்கும். சோம்பி உட்கார்ந்து ரீல்ஸ் பார்ப்பது, படுத்துக் கொண்டே டிவியில் மூழ்கிக் கிடப்பது, செல்போனில் தவம் கிடப்பது ஆகியவை உடலுக்கும் மனசுக்கும் கேடாகும்.
உங்கள் உடல் நிலைக்கு ஏற்ப, உங்களுக்கு முறையான உணவு மற்றும் உடற்பயிற்சி ஆலோசனையை உடற்பயிற்சி நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களிடமிருந்து பெறுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 8 கப் தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் உங்கள் உடல் செயல்பாடுகளை சீராக வைத்திருக்கும். மீன், கோழி, முட்டை போன்ற புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். புரதச் சத்து உங்கள் உடலில் தாதுக்களை வலுவாக்கும்.
மன அழுத்தம் இன்னொரு பிரச்சினை. இதுவும் உடல் எடையைப் பாதிக்கும். இதைக் குறைக்க யோகா உள்ளிட்ட பல வழிகள் உள்ளன. அதைப் பின்பற்றலாம்.
குறிப்பு: எது செய்தாலும் உங்கள் எடைக் குறைப்பு தொடர்பாக முதலில் உரிய மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொண்டு அதன் பின்னர் பின்பற்றவும்.
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!
Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!
{{comments.comment}}