டெல்லி: நாடு முழுவதும் கட்டணம் இன்றி ஆதார் அட்டையை செப்டம்பர் 14-க்குள் புதுப்பிக்க இன்னும் நான்கு நாட்களே உள்ளன.
ஆதார் அட்டை என்பது தனிமனிதனின் அடையாளத்தை குறிக்கும் 12 எண் இலக்க எண்களைக் கொண்ட தனி நபர் அடையாள ஆவணமாகும். அரசு சார்பில் பெறப்படும் எந்த ஒரு திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெற ஆதார் எண் என்பது மிகவும் அவசியம். குறிப்பாக ஆதார் அட்டை பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து பத்து வருடங்களுக்கு ஒரு முறை ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும். எனவே ஆதார் அட்டையை இதுவரை புதுப்பிக்காமல் இருப்பவர்கள் செப்டம்பர் 14 க்குள் புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, செப்டம்பர் 14ஆம் தேதி கட்டணம் இன்றி ஆதார் எண்களை புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன. அதேசமயம், செப்டம்பர் 14ஆம் தேதிக்குப் பிறகும் புதுப்பிக்கவில்லை என்றால் உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது. மாறாக, ரூபாய் 50 கட்டணம் செலுத்தி ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும். இலவசமாகவே புதுப்பிக்க அரசு வழி ஏற்படுத்திக் கொடுத்திருப்பதால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாமே.

சரி ஆதார் அட்டையை எப்படி புதுப்பிக்கலாம்..? வாங்க பார்க்கலாம்.
* https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணைப்புக்கு முதலில் செல்லுங்கள்.
* லாகின் செய்வதற்கான பட்டனை கிளிக் செய்யுங்கள். அங்கு உங்களுடைய ஆதார் நம்பரை நிரப்ப வேண்டும்.
* பிறகு அங்குள்ள கேப்சாவை சரியாக டைப் செய்ய வேண்டும்.
* பிறகு உங்கள் ஆதார் உடன் எந்த போன் நம்பர் இணைப்பு செய்யப்பட்டுள்ளதோ அந்த போன் நம்பருக்கு OTP வரும்
* செல்போனுக்கு வரும் OTP கொண்டு login செய்ய வேண்டும். அப்போது புதிதாக ஒரு ஸ்கிரீன் திறக்கும்.
* உங்கள் அடையாளம் மற்றும் இருப்பிட சுய விவரங்களை சரி பார்க்க வேண்டும்.
* விவரங்கள் சரியாக இருந்தால் I verify that the above details are correct என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
* பிறகு, தாக்கல் செய்ய வேண்டிய அடையாள மற்றும் முகவரி சான்று ஆவண நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
* சான்று ஆவணங்கள் 2MB அளவுக்கு உட்பட்ட JPEG, PNG அல்லது PDF வடிவில் இருக்க வேண்டும்.
* அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Sai Jadhav.. 4வது தலைமுறையாக ராணுவ உடை அணியும் பெண்.. தொடரும் இந்திய பெண்களின் சாதனை!
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
மார்கழி திங்கள் பிறந்ததம்மா!
Destination Maldives.. போவோமா ஊர்கோலம்.. அதுவும் நம்ம பட்ஜெட்டுக்குள்.. மாலத்தீவுக்கு!
சென்னையில் ரூ.39 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பனியும் கொட்டுது.. மழையும் பெய்யுது.. அப்படியே மூக்கும் ஒழுகுதா.. இந்தாங்க பாட்டி வைத்தியம்!
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
அதிமுக - பாஜக கூட்டணியை கண்டு திமுக நடுக்கிப்போயுள்ளது: ஆர்.பி.உதயகுமார் பேட்டி
மார்கழித் திங்கள் அல்லவா.. மதி கொஞ்சும் நாள் அல்லவா.. மார்கழி மாத சிறப்புகள்!
{{comments.comment}}