டில்லி : இரவு சாப்பாட்டிற்கு பிறகு பலருக்கும் அஜீரண பிரச்சனை, நெஞ்சு எரிச்சல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கமாக இருக்கும். எவ்ளவு தான் சீக்கிரமாக சாப்பிட்டாலும் இரவில் இந்த அஜீரண பிரச்சனை பாடாய் படுத்தும். இப்படி அஜீரண கோளாறால் அவதிப்படுபவர்கள் இந்த டிப்ஸ்களை டிரை பண்ணி பார்க்கலாம்.
இரவு நேர அஜீரண பிரச்சனைகள் நீங்க :
1. இரவு சாப்பிட்ட பிறகு சிறிது பெருஞ்சீரகம் அல்லது சோம்பு எடுத்து வாயில் போட்டு சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படாது. சோம்பில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்ரி காரணிகள் அஜீரணம், வாயு பிரச்சனைகள், பாக்டீரியாவில் ஏற்படும் தொல்லைகளை போக்கும்.
2. இரவு உணவு அல்லது சாப்பிட்ட பிறகு யோகட் போன்ற ப்ரோபயாடிக்களை உட் கொள்வது மிகவும் நல்லது. இவைகள் உணவு துகள்கள் மீது செயல்பட்டு எளிதில் நொதிக்கச் செய்து அதிலுள்ள சத்துக்களை உடலில் உறிஞ்ச செய்யும். இதனால் வயிற்று பொறுமல், அஜீரணம் ஏற்படாது.
3. இரவு சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடிப்பதால் எளிதில் ஜீரணம் ஆகும். இது வயிற்றை லேசாக்கும். வயிற்றில் உணவுகள் எளிதில் ஜீரணம் ஆவதற்கும், சத்துக்கள் உடலில் உறிஞ்சப்படவும் உதவும்.

சாப்பிட்ட பிறகு நடப்பது நல்லது
4. சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இது ஜீரண சக்தியை அதிகரிப்பதுடன், உடலில் எடை ஏறுவதை குறைக்கும்.உடல் இயக்கம் என்பது வயிற்றுப் பகுதி மற்றும் குடல் இயக்கங்களை அதிகப்படுத்தும்.
5. சாப்பிட்ட பிறகு சிறிதளவு லேசான பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். இது உங்களுக்கு நிறைவாக சாப்பிட்ட திருப்தியை ஏற்படுத்துவதுடன் பழங்களில் உள்ள இயற்கையான இனிப்புகள் என்சைம்களுடன் வேகமாக வினை புரிந்து புரோட்டீன்களை உடைத்து, ஜீரணத்தை வேகமாக்கும்.
சாப்பிட்டதும் படுக்காதீர்கள்

6. சாப்பிட்டதும் படுப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட பிறகு குறைந்த பட்சம் 2 அல்லது 3 நேரம் கழித்து தான் படுக்க செல்ல வேண்டும். இந்த கால அவகாசம் ஜீரணத்திற்கு உதவுவதுடன், அஜீரணம், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும்.
7. சாப்பிட்ட பிறகு வயிற்று பகுதியில் லேசாக சமாஜ் செய்து விடுங்கள். இதனால் ஜீரணம் வேகமாக நடக்கும். மூச்சை மெதுவாக உள்ளிழுத்து விட்டபடி மெதுவாக விரல்களை பயன்படுத்தி வட்ட வடிவமாக மசாஜ் செய்வதால் நாளடைவில் தொப்பையில் இருக்கும் தேவையற்ற சதைகள் கரைய துவங்கி விடும். ஒட்டு மொத்தம் அடி வயிறுக்கும் சேர்த்து மசாஜ் செய்வது மிக நல்லது.
8. சாப்பிட்ட பிறகு மூலிகை டீ குடிக்கலாம். இது ஜீரணத்தை எளிமையாக்குவதுடன் தசைகளை அமைதி அடைய செய்யும். குடல் பகுதியில் இயக்கம் சீராக நடக்க உதவும்.
9. இரவு சாப்பிட்ட பிறகு சிறிதளவு டார்க் சாக்லேட் எடுத்துக் கொள்வது ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. அதிலுள்ள ஆன்டிஆக்சிடென்ட்கள் ஜீரண நொதிகளை உற்பத்தி செய்து எளிதில் உணவை ஜீரணமாக வைக்கும். ஆனால் அதிகம் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கலோரிகள் அதிகரிக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆஹா சூப்பர் ருசி -- மரவள்ளி கிழங்கு சுழியம்!
சுவையான மோர்க்குழம்பு.. வச்சு சாப்பிட்டுப் பாருங்க.. மறக்கவே மாட்டீங்க!
மாதவிடாய் வலியா.. இடுப்பு வலியா.. இருக்கவே இருக்கு பாரம்பரிய வைத்தியம்!
நன்றியுணர்வு மலரட்டும்.. Gratitude in Bloom: Don't Take Your Parents for Granted
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரம்.. புதிய தாக்குதலில் இறங்கிய ரஷ்ய ராணுவம்
அதிமுக எத்தனை இடங்களில் போட்டி? பாஜக., கேட்பது என்ன?...வெளியான சுவாரஸ்ய தகவல்
ராத்திரி 11 மணியானா போதும்.. இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்வது இதைத்தானாம்!
பிரம்மாண்ட ப்ளூபேர்டை லாவகமாக கொண்டு சென்ற பாகுபலி!
{{comments.comment}}