சென்னை குன்றத்தூரில் நடந்த விபரீதம்.. பரிதாபமாக பறி போன 2 உயிர்கள்.. எலி மருந்து இவ்வளவு கொடூரமானதா?

Nov 15, 2024,01:00 PM IST

சென்னை: சென்னை,  குன்றத்தூரில் எலியைக் கொல்ல வைத்த மருந்தின் நெடி தாக்கி ஒரு குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது. அதில் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர வைத்துள்ளது.


குன்றத்தூர் அருகே உள்ள மாஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் கிரிதரன். இவருக்கு வயது 34. மனைவி பெயர் பவித்ரா. இந்த தம்பதிக்கு 6 வயதில் வைஷ்ணவி என்ற பெண் குழந்தையும், ஒரு வயதில் சாய் சுதர்சன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். கிரிதரன் அதே பகுதியில் தனியார் பேங்கில் பணிபுரிந்து வருகிறார். 


கிரிதரன் வீட்டில் கடந்த சில நாட்களாகவே எலி தொல்லை இருந்து வந்ததால் அதனை சரி செய்ய எலி மருந்துகளையும் ஆங்காங்கே வீட்டில் உள்ள பகுதிகள் முழுவதும் வைத்துள்ளார். இதற்காக ஆன்லைன் மூலம் ஒரு நிறுவனத்தின் உதவியை நாடி இதைச் செய்துள்ளனர். சம்பவத்தன்று கணவன் மனைவி குழந்தைகள் என அனைவரும் ஏசி ஆன் பண்ணிவிட்டு தூங்கிவிட்டனர். ஆனால்  மறுநாள் காலையில் அனைவருக்கும்  மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. 


இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கிரிதரன் பவித்ரா மற்றும் குழந்தைகளை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிறிது நேரத்தில் வைஷ்ணவி மற்றும் சாய் சுதர்சன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்கள். அதேசமயம் கிரிதரன் மற்றும் பவித்ரா ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பவித்ராவுக்கு மட்டும் நினைவு திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. 




இதனை அறிந்த குன்றத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது எலியை விரட்ட வீடு முழுவதும் எலி மருந்து வைத்ததில் அதிலிருந்து வெளியேறிய ரசாயனம் வீடு முழுவதும் காற்றில் பரவி அதனை சுவாசித்த நான்கு பேருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. 


விஷத்தன்மை வாய்ந்த பூச்சிக் கொல்லிகள்


விவசாய பணியை மேற்கொள்ளும் போது விளைச்சலில்  பூச்சிகளும் எலிகளும் ஊடுருவி நாச வேலைகளை செய்யும். இதனால் விவசாய நிலங்களை பாதுகாக்க விவசாயிகள் வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் எலி மருந்துகளை பயன்படுத்துவது வழக்கம். இப்படி பயன்படுத்தும் போது வயல்களில் பூச்சிகள் மற்றும் எலிகள் வராமல் விளைச்சல் நன்றாக இருக்கும். இவை விஷத்தன்மை கொண்டவை. இவற்றைப் பயன்படுத்தும்போது மிகுந்த கவனம் தேவை.


இந்த மருந்துகளின் வீரியத்திலிருந்து வெளிப்படும் நச்சுத்தன்மை சில சமயம் மனிதர்களும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் ஒவ்வொரு மருந்துகளின் வீரிய தன்மையும் அதன் பாதிப்புகளையும் அறிந்து பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சில சமயம் நாம் பயன்படுத்தும் நச்சு தன்மை மிகுந்த மருந்துகள் நமக்கு வினையாகவும் அமையும். அப்படித்தான் சென்னை குன்றத்தூரில் கிரிதரன் குடும்பத்தைச் சேர்ந்த  குழந்தைகள் இருவரும் எலி மருந்தின் வீரியத்தால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


எந்த ஒரு மருந்து என்றாலும் அதனின் வீரிய தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். பின்னர் அதை வீட்டில் பயன்படுத்தலாமா.. அதிலிருந்து எவ்வளவு நச்சுக்கள் வெளியேறுகிறது என்பதை தெரிந்து கொண்டுதான் உபயோகப்படுத்த வேண்டும். இது மட்டுமல்லாமல் ஏசி அறையில் உபயோகிக்கலாமா என்பது போன்ற விவரங்களை தெரிந்து கொண்டு பிறகுதான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஏசி பயன்படுத்தும் போது ஏசி வெளியேராமல் இருக்க கதவு ஜன்னல் என அனைத்தையும் மூடி விடுவோம். இதனால் உள் காற்று வெளியேறாமலும், வெளிக்காற்று உள்ளே வராமலும் இருக்கும். அந்த சமயம் நாம் பயன்படுத்தும் எலி மருந்துகளிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மை  ஏசி காற்றில் கலக்கும். பின்னர் அந்த காற்றை நாம் சுவாசிக்கும் போது நமக்கு மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். 


அதாவது நாம் சுவாசிக்கும் போது நமது மூக்கு மற்றும் தொண்டை குழாய் வழியாக அந்த நச்சு நமது நுரையீரலுக்குப் பாய் தொற்றை ஏற்படுத்தி நமது சுவாசத்தையே பாதித்து விடும். இதனால்தான் மூச்சுத் திணறல் உண்டாகிறது. இது அதீதமாகும்போதுதான் மூச்சுத் திணறல் அதிகரித்து உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. அப்படிதான் ஏசி அறையில் எலி மருந்தை பயன்படுத்திய குடும்பத்தில் உள்ள இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். 


இனியாவது இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அதில் அவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களா, சரியாக செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு செய்வது நல்லது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கனிமொழி சொன்ன புதிய கட்சிகள்... உள்ளே வரப் போவது யார்.. அவர்களா? பரபரக்கும் அரசியல் களம்

news

தீயில் எரிந்தது விவசாயி மட்டும் அல்ல..சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்:எடப்பாடி பழனிச்சாமி

news

2026 தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 50 இடங்களில் போட்டியா?

news

அதிமுக - பாஜக வாக்கு வங்கியை பதம் பார்க்கிறாரா விஜய்.. சிவோட்டர் சர்வே சொல்வது என்ன?

news

தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

news

'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்த சிக்கல்: உச்ச நீதிமன்றத்தில் தணிக்கை வாரியம் புதிய மனு

news

இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது

news

பல ஆண்டுகளாக காங்கிரஸ் உடன் கூட்டணியில் உள்ளோம்..அக்கட்சியுடன் மோதல் போக்கு இல்லை:எம்பி கனிமொழி

news

தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.4,800 குறைவு

அதிகம் பார்க்கும் செய்திகள்