இருவருக்கும் "உறவு".. ஜாதியைச் சொல்லித் திட்டினார்.. கொன்னுட்டேன்.. பதற வைத்த வெங்கடேசன்!

Feb 12, 2024,01:56 PM IST

பெரம்பலூர்:  பெரம்பலூர் வேப்பந்தட்டை ஆசிரியை தீபா கொலை வழக்கில் கைதாகியுள்ள சக ஆசிரியரான வெங்கடேசன் கொடுத்துள்ள வாக்குமூலம் அதிர வைப்பதாக உள்ளது.


தீபாவைக்  கொல்லும் அளவுக்கு இருவருக்குள்ளும் என்ன நடந்தது என்பது குறித்து ஆசிரியர் வெங்கடேசன் போலீஸாரிடம் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.


பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் ஒரு பொறியாளர். இவரது மனைவிதான் தீபா. கணித ஆசிரியையாக வேப்பந்தட்டை அரசுப் பள்ளியில் பணியாற்றி வந்தார். இவருடன் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர்தான் வெங்கடேசன். இருவரும்  கடந்த மாதம் திடீரென ஒரே சமயத்தில் காணாமல் போய் விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.




பாலமுருகனும், வெங்கடேசன் மனைவி காயத்ரி ஆகியோர் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் புகாரைப் பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் வெங்கடேசன் போலீஸில் சிக்கினார்.  அவரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தபோது தீபாவை சுத்தியலால் அடித்துக் கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார் வெங்கடேசன்.


கொலை செய்தது ஏன் என்பது குறித்து திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார் வெங்கடேசன். இருவருக்குள்ளும்  ரகசிய உறவு இருந்துள்ளது. நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இந்த நெருக்கத்தின்  பலனாக, வெங்கடேசன் செய்து வந்த ஆன்லைன் டிரேடிங்குக்குத் தேவைப்பட்ட பணத்தை தனது கணவரிடமிருந்து கடனாகப் பெற்று வெங்கடேசனுக்குக் கொடுத்து வந்துள்ளார் தீபா.


ஆனால் வாங்கிய கடனை கொடுக்காமல் இருந்துள்ளார் வெங்கடேசன். ஆன்லைன் டிரேடிங்கிலும் அவர் பெரும் இழப்பை சந்தித்துள்ளார். கடனும் பல லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் தீபா, வெங்கடேசனுடன் சண்டை போட்டுள்ளார். இதுதொடர்பாக இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்  சம்பவ தினத்தன்று வெங்கடேசனைத் திட்டிய தீபா, அவரது ஜாதிப் பெயரையும் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த வெங்கடேசன், அவரை கொலை செய்யத் திட்டமிட்டு வெளியில் அழைத்துச் சென்றுள்ளார்.


வெங்கடேசனின் திட்டம் தெரியாமல் தனது காரிலேயே அவருடன் கிளம்பியுள்ளார் தீபா. திருச்சியைத் தாண்டியதும், காரை நிறுத்தச் சொன்ன வெங்கடேசன், காரில் ஏற்கனவே வைத்திருந்த சுத்தியலை எடுத்து சரமாரியாக தீபாவை தலையிலேயே அடித்துக் கொலை செய்துள்ளார்.  பின்னர் உடலை அந்தப் பகுதியிலேயே தீ வைத்து எரித்து விட்டார். காரை கோவை கொண்டு போய் உக்கடம் பகுதியில் நிறுத்தி விட்டு தலைமறைவாகி விட்டார்.


வாக்குமூலத்தில் இந்தத் தகவல்களைத்  தெரிவித்துள்ளார் வெங்கடேசன். ஏற்கனவே காரில் சுத்தியலை ரத்தக்கறையுடன் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் அந்த ரத்தம் தீபாவுடையது என்று தெரிய வந்துள்ளது. தற்போது தீவைத்து எரிக்கப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை போலீஸார் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!

news

26 ஆண்டுக்குப் பின் மணந்த "ரோஜா".. மிரட்டிய சத்தியன் மகாலிங்கம்.. இன்னொரு ரவுண்டு வாங்க பாஸ்!

news

ரஸ்தாளி வாழைப்பழம்.. ஊட்டச்சத்து நிறைந்த ராயல் பழம்.. டெய்லி சாப்பிடுங்க.. ஹெல்த்தியா இருங்க!

news

திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!

news

செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்

news

நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!

news

Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை

news

திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!

news

அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்