அடிக்கடி வீடியோ கால்.. மனைவியின் செயலால் ஆத்திரமடைந்த கணவர்.. அடுத்து அவர் செய்த காரியம்!

Apr 27, 2024,12:42 PM IST
வேலூர்: மனைவி அடிக்கடி வீடியோ காலில் பேசியதால் ஆத்திரமடைந்த கணவர், அவரது கையை அரிவாள்மனையால் வெட்டிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. 

செல்போனுக்கு பலர் இன்று மோசமான முறையில் அடிமையாகிக் கிடக்கின்றனர். செல்லை நோண்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள் பலரும். யூடியூப் பார்ப்பது, ரீல்ஸ் பார்ப்பது, பாட்டுக் கேட்பது என்று பலரும் மயங்கிப் போய் உள்ளனர். அதிலும் இந்த ரீல்ஸ் மோகம் பலரையும் பிடித்து ஆட்டுகிறது. முன்பெல்லாம் சின்னப் பசங்கதான் செய்வார்கள். ஆனால் இன்றோ படுத்த படுக்கையாக கிடக்கும் பாட்டிகளைக் கூட தூக்கிக் கொண்டு வந்து வேடிக்கை காட்டி லைக்ஸ் அள்ளுகின்றனர். பாட்டிகளும் ஜாலியாகத்தான் ரீல்ஸ் பண்ணுகிறார்கள்.

பொழுது போக்குகள்.. அந்த அளவில் இருந்தால் நல்லது.. அதைத் தாண்டும்போதுதான் விபரீதங்கள் ஏற்படுகின்றன. அப்படி ஒரு விபரீதம்தான் இப்போது வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்துள்ளது.



குடியாத்தம் பிச்சனூர் பேட்டையை சேர்ந்தவர் சேகர். நெசவுத்தொழிலாளியான இவருக்கு வயது 42. இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதியினர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களில் இருவருக்கு திருமணம் முடிந்த நிலையில், ஒரு மகள் மட்டும் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரேவதி சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவிட்டும், அதிக  நேரம் வீடியோ காலில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. கணவன் சேகரன் அதிக நேரம் பேசுவது குறித்து ரேவதியை கண்டித்துள்ளார். இதனிடையே ரேவதி மீண்டும் வீடியோ காலில் பேசியதை பார்த்த சேகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சேகர், வீட்டில் இருந்த அரிவாள்மனையால் ரேவதியின் வலது கையில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரேவதி கதறி துடித்துள்ளார்.  அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் ரேவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அறிந்து வந்த போலீசார் சேகரை கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போன் பேசிய மனைவியின் கையை வெட்டிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்