நான் அதுல பாதி, இதுல பாதி கிடையாது.. என் அரசியல் தமிழ் தேச அரசியல்.. குழப்பமே இல்லை.. சீமான்

Nov 11, 2024,05:49 PM IST

தூத்துக்குடி: எந்த குழப்பமும் இல்லை. நான் தமிழ் மகன். என் தேசம் தமிழ் தேசம். என் அரசியல் தமிழ் தேச அரசியல். நான் அதுல பாதி, இதுல பாதி கிடையாது. என் தேசம் இது. நாடு தமிழ்நாடு, அப்படி என்றால் தேசம் தமிழ் தேசம் தான் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில், பெண்களுக்கு உரிமை, எல்லோருக்கும் கல்வி, கல்விக்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்ற சம்பளம் என இதை கொண்டு பெருமை மிக்க வாழ்வு, தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி இது எல்லாம் கொண்டு ஒரு அரசியல் இருக்கிறது. இந்த அரசியல் தமிழ் தேச அரசியல். இதுல எதாவது சந்தேகம் இருக்கா. 




திராவிடம் என்றால் என்ன? திராவிட அரசியல் என்றால் என்ன? சொல்லச் சொல்லுங்கள். திராவிடம், தமிழ் தேசம் என்ற குழப்பம் எல்லாம், யாருடனாவது கூட்டணி வைத்து நிற்பதற்கு பயன்படும். இது ஒரு போர். இந்தியம் என்பதும் திராவிடம் என்பது கற்பிதம். 


எந்த குழப்பமும் இல்லை. நான் தமிழ் மகன். என் தேசம் தமிழ் தேச அரசியல். என் அரசியல் தமிழ் தேச அரசியல். நான் அதுல பாதி, இதுல பாதி கிடையாது. என் தேசம் இது. நாடு தமிழ்நாடு, அப்படி என்றால் தேசம் தமிழ் தேசம் தான். இங்கு வாழ்கின்ற மக்கள், அவர்களுடைய மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வழிபாடு, காட்டு வளம், கனிம வளம், நீர்வளம், மழைவளம், மணல் வளம், கடல் வளம் இவற்றை காக்க வேண்டும். 


இந்தியா என்கிற ஒரு நாட்டை உருவாக்கியது யார்? வெள்ளைக்காரன். பெயர் வைத்தது யார்?  வெள்ளைக்காரன். துப்பாக்கி முனையில் இந்தியா என சொல்ல வைத்தான். உயிரா, உரிமையா என்று கேட்டதற்கு உயிர் என்று சொல்லிவிட்டார்கள். வெள்ளைக்காரன் பெத்து, பெயர் வைத்துவிட்டு சென்றதற்கு இவர்கள் அப்பன் முறை கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள். அது தான் இந்த திராவிடம். வசதியாக திருடுவதற்கு, பதுங்கி இருப்பதற்கு கொண்டு வந்தது தான் திராவிடம் . திராவிடம் என்பது இனம், இடம் என்று சொல்லி கொண்டு இருந்தார்கள்.


கடைசியில் தமிழ்தேசமும், திராவிடமும் ஒன்றுதான் என்று சொல்லிவிட்டார்கள். அது எப்படி கொலைகாரனும், செத்து விழுகிறவனும் ஒன்றாக இருப்பார்கள். நான் எங்க அப்பன் செத்தால் உளமாற அழுவேன். நீ ஒப்புக்கு அழுவாய். நீயும் நானும் ஒன்றா? தமிழ்தேசம் கடற்கரையை கடற்கரையாக பார்க்கும். திராவிடம் கடற்கரையை கல்லறையாக்கும். 2026ல் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டி, என் பயணம் என் கால்களை நம்பிதான். அடுத்தவர் கால்களை நம்பி பயணத்தை தொடர மாட்டேன் என்று கூறியுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2 நாள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு!

news

Bihar Assembly elections: களத்தைக் கலக்கும் இளம் புயல் மைதிலி தாகூர்.. அதிர வைக்கும் யூடியூபர்!

news

பீகாரில் விறுவிறுப்பான சட்டசபைத் தேர்தல்.. சுறுசுறுப்பான முதல் கட்ட வாக்குப் பதிவு

news

அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது தவறு.. டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேட்டி

news

ஐப்பசி கிருத்திகை.. முருகனுக்கு உகந்த நாள்.. விரதம் இருந்தால் வேண்டியது கிடைக்கும்

news

சும்மா இருக்கும் மனம் தெய்வீகத்தின் பட்டறை/பணியிடம்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 06, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

news

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழை இருக்குனு தெரியுமா... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட அரசு முன்வரவேண்டும்: திருமாவளவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்