சென்னை: பாதுகாப்பாக இருக்கும் போது தான் சந்தோஷமாக இருக்க முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாத போது சந்தோஷம் இருக்காது தானே. அப்படி நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. என்ன செய்ய இப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று தெரியாது. நீங்க நாங்க எல்லாரும் சேர்ந்து தானே இந்த திமுக அரசை தேர்தெடுத்தோம் என்று மகளிர் தினத்தில் திமுகவை நேரடியாக தாக்கிப்பேசியுள்ளார் தவெக கட்சி தலைவர் விஜய்.
இன்று உலகம் முழுவதிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் நேற்றில் இருந்தே தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஓர் ஆண்டிற்கு முன்னர் கட்சி ஆரம்பித்த தவெக தலைவர் விஜய் இன்று தனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். வழக்கமாக எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை பதிவாக வெளியிட்டு வந்த விஜய் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மகளிர் தின வாழ்த்துக்களுடன், இதுவரைக்கு எந்த கட்சியின் பெயரையும் நேரடியாக சொல்லி விமர்சிக்காத விஜய் இன்று நேரடியாக திமுக கட்சியின் பெயரை சொல்லி தாக்கிப் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்துமாறு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் விஜய்.
இந்நிலையில், மகளிர் தினம் குறித்து விஜய் வெளிட்ட விடியோவில், எல்லோருக்கும் வணக்கம் இன்று மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் இருக்கிற எனது அம்மா, அக்கா, தங்கை, தோழி என்று நினைத்து உங்கள் அத்தனை பேருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். உங்களுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள். சந்தோசம் தானே. பாதுகாப்பாக இருக்கும் போது தான் சந்தோஷமாக இருக்க முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாத போது சந்தோஷம் இருக்காது தானே.
அப்படி நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. என்ன செய்ய இப்படி நம்மை ஏமாற்றுவார்கள் என்று தெரியாது. நீங்க நாங்க எல்லாரும் சேர்ந்து தானே இந்த திமுக அரசை தேர்தெடுத்தோம். எல்லாமே இங்க மாறக்கூடியது தானே. மாற்றத்துக்கு உரியதுதானே. கவலைப்படாதீங்க. இந்த 2026 ஆம் ஆண்டு நீங்க நான் எல்லாரும் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுகவை மாற்றவும், அதற்கு மகளிர் தினம் ஆனா இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம். உங்களுடைய எல்லா சூழ்நிலையிலும் ஒரு மகனாக, அண்ணனாக, தந்தையாக, தோழனாக நான் உங்களுடன் நிற்பேன். நன்றி வணக்கம் என்று கூறியுள்ளார்.
வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை...தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்த சென்னை வானிலை மையம
நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த குழுக்களால் மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?: அண்ணாமலை கேள்வி
மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் நிதி வழங்க வேண்டும்: சீமான்!
தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது.. ஏன்னா.. உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
சவரன் ஒரு லட்சத்தை நோக்கி உயர்ந்து வரும் தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 உயர்வு!
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்.. 85வது இடத்திற்கு இறங்கியது இந்தியா.. நம்பர் 1 யார் தெரியுமா?
வெற்றிகரமாக தொடங்கிய வட கிழக்குப் பருவ மழை.. தமிழ்நாடு முழுவதும் ஜில் ஜில் கூல் கூல்!
பாதுகாப்பான தீபாவளி - பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு அலுவலர் விழிப்புணர்வு பேச்சு
ஏங்க! தீபாவளிக்கு முறுக்கு சுடலான்னு இருக்கேன்.. நான் கடைக்கு போயி சுத்தியல் வாங்கிட்டு வந்திடுறேன்
{{comments.comment}}