டெல்லி: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டித் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்துமே துபாயில் நடைபெறவுள்ளன.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை பாகிஸ்தான் நடத்தவுள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்குப் போய் விளையாட முடியாது என்று மறுத்து விட்டதால் தற்போது இந்தியா மோதும் போட்டிகள் அனைத்தும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன்ஸ் டிராபி போடடிகள் நடைபெறவுள்ளன.
19 நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் போட்டித் தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி தொடங்கும். மார்ச் 9ம் தேதி லாகூரில் இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் எட்டு அணிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளன. இவற்றுக்கு இடையே 15 போட்டிகள் நடைபெறவுள்ளன. பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி, லாகூர், கராச்சியில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு மைதானத்திலும் தலா 3 குரூப் போட்டிகள் நடைபெறும். 2வது அரை இறுதிப் போட்டியும் லாகூரில் நடைபெறும். ஒரு வேளை இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றால் இறுதிப் போட்டி துபாயில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் அரை இறுதிப் போட்டி மற்றும் இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் பிப்ரவரி 19ம் தேதி பாகிஸ்தானும், நியூசிலாந்தும் கராச்சியில் மோதவுள்ளன. அனைத்துப் போட்டிகளும் பகல் இரவுப் போட்டியாக நடைபெறும்.
அணிகள் விவரம்:
ஏ பிரிவு- இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம்
பி பிரிவு - தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து
போட்டி அட்டவணை:
பிப்ரவரி 19 - பாகிஸ்தான் - நியூசிலாந்து (கராச்சி)
பிப்ரவரி 20 - இந்தியா - வங்கதேசம் (துபாய்)
பிப்ரவரி 21 - பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா (கராச்சி)
பிப்ரவரி 22 - ஆஸ்திரேலியா - இங்கிலாந்து (லாகூர்)
பிப்ரவரி 23 - இந்தியா - பாகிஸ்தான் (துபாய்)
பிப்ரவரி 24 - வங்கதேசம் - நியூசிலாந்து (ராவல்பிண்டி)
பிப்ரவரி 25 - ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா (ராவல்பிண்டி)
பிப்ரவரி 26 - ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து (லாகூர்)
பிப்ரவரி 27 - பாகிஸ்தான் - வங்கதேசம் (ராவல்பிண்டி)
பிப்ரவரி 28 - ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா (லாகூர்)
மார்ச் 1 - தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து (கராச்சி)
மார்ச் 2 - இந்தியா - நியூசிலாந்து (துபாய்)
மார்ச் 4 - முதல் அரை இறுதி (துபாய்)
மார்ச் 5 - 2வது அரை இறுதி (லாகூர்)
மார்ச் 9 - இறுதிப் போட்டி (லாகூர் அல்லது துபாய்)
மார்ச் 10 - ரிசர்வ் தினம்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அத்தையுடன் தவறான உறவு.. இளைஞரை அடித்து உதைத்த உறவினர்கள்.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்!
கல்விதான் ஒருவரின் நிலையான சொத்து... மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு.. ஜூலை 16ல் ஏமனில் மரண தண்டனை?.. கவலையில் குடும்பம்!
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்: ஏறிய வேகத்தில் இறங்கியது தங்கம் விலை!
அதிகரித்து வரும் காற்று மாசு.. திக்கித் திணறும் தலைநகர் டெல்லி.. கவலையில் மத்திய அரசு!
Bharat Bandh: நாடு முழுவதும் 25 கோடித் தொழிலாளர்கள் ஸ்டிரைக்.. முடங்கும் முக்கிய சேவைகள்!
காமத் தீயில் வெந்து போனது காமுகனின் மனசு.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!
2 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 09, 2025... இன்று நல்ல நேரம் தேடி வரும் ராசிக்காரர்கள்
பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?
{{comments.comment}}