- மஞ்சுளா தேவி
அகமதாபாத்: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று கோலாகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள், இந்தியாவின் பிரம்மாண்டமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சந்திக்கவுள்ளன.
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் உலகக்கோப்பைத் தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து, தென்ஆப்பிரிக்கா என மொத்தம் பத்து அணிகள் பங்கு பெறுகின்றன.
இன்று முதல் போட்டி நடைபெறுகிறது. நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி இன்று உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும்.
நியூசிலாந்து அணி
"பிளாக் கேப்ஸ்" என்று செல்லமாக அழைக்கப்படும் நியூசிலாந்து அணி மிகவும் திறமையான அணியாகும். இளைஞர்கள் நிரம்பிய இந்த அணியில், வேகப்பந்து வீச்சாளர்களும், ஆல்ரவுண்டர்களும் நிரம்பியுள்ளனர். நியூசிலாந்து அணி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டு உலக கோப்பையின் இரண்டாம் இடத்தை பிடித்தது. இதுவரை உலகக் கோப்பையை வெல்லாத ஒரு அணியாக வலம் வருகிறது. இந்த முறை எப்படியாவது சாம்பியன்ஷிப்பை வென்று விட வேண்டும் என்ற முனைப்போடு தீவிரமான பயிற்சி எடுத்துக் காத்திருக்கிறது.
நியூசிலாந்து அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் இருக்கிறார். வில் யங், டிரண்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், ராச்சின் ரவீந்திரன், மிட்சல் சான்ட்னர், இஷ் சோதி, கிளன் பிலிப்ஸ், டிம் செளதி ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி
கிரிக்கெட்டின் தாயகமாக கருதப்படுவது இங்கிலாந்து. ஆனால் இங்கிலாந்து அணி இதுவரை ஒருமுறை மட்டுமே உலகக் கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள லாட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி முதன் முறையாக உலகக்கோப்பை பட்டத்தை வென்றது.
முந்தைய தொடரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து இந்த ஆண்டும் உலக கோப்பையை தக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் கேப்டனாக உள்ளார். இவர் தலைமையில் இங்கிலாந்து அணியில் மொயீன் அலி, கஸ் அட்கின்சன், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, சோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, ஹேரி ப்ரூக், மார்க் வுட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இந்தியாவின் முதல் போட்டி எப்போது
வருகின்ற 8 ஆம் தேதி இந்திய அணியின் முதல் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. தனது முதல் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலியாவை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தில் களமிறங்க உள்ளது இந்தியா.
ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் 14ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும்.
அமெரிக்காவில் பரபரப்பு.. குளறுபடியாக பேசிய ஜோ பைடன்.. வெளியான ஆடியோவால் சர்ச்சை!
பை, புக்ஸ் வேண்டாம்.. நீங்க வந்தா மட்டும் போதும்.. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன கேரள அரசு!
மத்திய அரசு கேட்டது 4 பேர்.. காங்கிரஸ் கொடுத்த பட்டியல் இது.. கடைசியில் செலக்ட் ஆனது இவர்!
பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை.. உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல 7 எம்பி.,க்கள் அடங்கிய குழு!
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம்... வெள்ளி விலை... இதோ இன்றைய விலை நிலவரம்!
நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்.. ஆர்வத்தில் ரசிகர்கள்..!
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட.. 4 சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த.. ஆளுநர் ஆர் என் ரவி!
ரிஷப சங்கராந்தி .. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைதிறப்பு.. 19 வரை திறந்திருக்கும்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்.. மே 17, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}