அகமதாபாத்: எப்படியும் ஏதாவது ஒரு அணி தான் 100% வெற்றியை பெரும். சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வெல்லும். ஒருவேளை 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது போல் இறுதி போட்டி டிராவில் நிறைவடைந்தால் என்ன ஆகும் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.
ஏனெனில் டிராவில் நிறைவடைந்த போட்டிகள் எத்தனையோ உள்ளன. ஆனால் உலகக்கோப்பை என்று வரும்போது இரு அணிகளும் சம அளவில் எடுத்தால் கூடுதலாக ஒரு ஓவர் அளிக்கப்படும். அதாவது சூப்பர் ஓவர் எனப்படும் கூடுதல் ஓவர் வழங்கப்படும். அந்த ஆறு பந்துகளில் எந்த அணி அதிக ரன்கள் பெறுகிறதோ அந்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பை வழங்கப்படும்.
சூப்பர் ஓவர் என்பது இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்படும். அந்த ஒரு ஓவரில் எந்த அணி கூடுதலாக ரன் பெறுகிறதோ அந்தணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ஆனால் இதிலும் விதிவிலக்காக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இரு அணிகளும் சம அளவிலான ரன்கள் எடுத்தன. இதனால் அந்தப் போட்டியில் எந்த அணியும் அதிக அளவிலான பவுண்டரிகளை அடித்ததோ அந்த அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.
ஆனால் இந்த முறை அவ்வாறு கிடையாது. அதற்குப் பதிலாக மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதுதான் இந்த ஆண்டின் ஸ்பெஷல். அதாவது முதல் சூப்பர் ஓவர் சுற்றில் இரண்டு அணிகளும் சம அளவில் ரன்கள் எடுத்திருந்தால், இரண்டாவதாக ஒரு சூப்பர் ஓவர் வழங்கப்படும். அந்த ஓவரில் எந்த அணி அதிக ரன்கள் எடுக்கிறதோ அந்த அணி மட்டுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிப்போட்டி அகமதாபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளில் எந்த அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்தியாவில் தான் வெற்றி பெறும் என சிலரும் ஆஸ்திரேலியா அணி தான் வெற்றி பெறும் என சிலரும் கூறிக்கொண்டு இருக்கின்றனர்.. பார்க்கலாம்.
அஜித்குமார் மரண விவகாரம்: சிவகங்கை எஸ்.பி.காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே.. அது உடம்புக்கு மட்டுமில்லீங்க.. மனசுக்கும் ரொம்ப அவசியம்!
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.840 உயர்வு!
டிரம்ப்பின் மசோதா நிறைவேறினால் புதுக் கட்சி.. மீண்டும் முருங்கை மரம் ஏறும் எலான் மஸ்க்!
ஹைதராபாத் அருகே.. மருந்துத் தொழிற்சாலையில் வெடிவிபத்து. பலி எண்ணிக்கை 32 ஆனது!
ஜூலை பிறந்தாச்சு.. இன்று முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கும் வந்தாச்சு.. நோட் பண்ணிக்கங்க!
அழகான அரேகா பனை (Areca palm).. பாசிட்டிவிட்டி பரப்பும்.. ஆரோக்கியத்துக்கும் நல்லது!
டெல்லியா நீங்க.. வச்சிருக்கிறது பழைய வண்டியா.. அப்படீன்னா உங்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 01, 2025... இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு
{{comments.comment}}