தவெக குறித்து விஷமக் கருத்துக்களை டிவி மூலம் திணிக்கிறார்கள்.. நம்பாதீர்கள்.. புஸ்ஸி ஆனந்த்

Mar 02, 2025,11:53 AM IST

சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக தவெக நிலைப்பாடு என்ற பெயரில், தவெக ஆதரவாளர்கள் என்ற பெயரில் மக்களிடையே விஷமக் கருத்துக்களை டிவி விவாதங்கள் மூலம் திணிக்கிறார்கள். அதை நம்ப வேண்டாம் என்று கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.


டிவி விவாதங்களில் பலரும் பங்கேற்கின்றனற். அதிகாரப்பூர்வமான கட்சி செய்தித் தொடர்பாளர்கள் தவிர ஆதரவாளர்கள் என்ற பெயரிலும் தற்போது பலர் தங்களது கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அதாவது அவர்கள் எதற்கு ஆதரவாக வருகிறார்களோ அதுகுறித்து இவர்கள் இஷ்டத்திற்கு கருத்துக்களைக் கூறுவது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இதுதொடர்பாக ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.




அதில் அவர் கூறியுள்ளதாவது:


தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தலைவர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொள்கை பரப்பு மற்றும் செய்தித் தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கழகத்தின் கருத்து மற்றும் நிலைப்பாடாகும்.


தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரைக் கழகத் தலைவர் அவர்கள் அறிவித்து, கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை, மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்று மற்றும் ஊக்கத் தொகை வழங்கியது, வெற்றிக் கொள்கைத் திருவிழா, கழக ஆண்டு விழா எனத் தமிழக வெற்றிக் கழகம் வீறுநடை போட்டு, மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்களை, பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களாகச் சித்திரித்து ஊடக விவாதங்களில் பங்கேற்கச் செய்து, திட்டமிட்ட சில விஷமக் கருத்துகளைத் திணிக்கும் பணியைச் செய்து வருகின்றன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களால் அல்லது அவரின் ஒப்புதலோடு தலைமை நிலையச் செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள், ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வக் கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்.


எனவே அதிகாரப்பூர்வமற்றவர்கள் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளைத் தமிழக மக்களும் கழகத் தோழர்களும் நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று ஆனந்த் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..வருகிற 15ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:வானிலை மையம்

news

திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் தான் உள்ளனர் கூட்டணி கட்சிகள்: செல்லூர் ராஜூ விமர்சனம்!

news

சேலம் வருகிறார் விஜய்.. நாளை நிர்வாகிகள் சந்திப்பு.. 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி!

news

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்

news

தொலைந்த பைசா தினம்.. ஆமாங்க.. இப்படியும் ஒரு தினம் இருக்கு.. அதுவும் இன்றுதான் அது!

news

கமகமக்கும் இறால் தொக்கு.. நம்ம ஊரு ஸ்டைல்ல.. சாப்ட்டுப் பாருங்க.. நாக்கு ஊறும்!

news

தாயையும் தம்பியையும்.. பள்ளியில் புகுந்து மாணவர்களை வேட்டையாடிய 18 வயது திருநங்கை!

news

கல்யாணம் காது குத்தா.. சுப நிகழ்ச்சிகளுக்கு இனி அரசு பேருந்து உங்கள் வாசலில்!

news

ஒரு சிறு பயணம்.. நிறைவாக கடப்போம்.. A Short Journey

அதிகம் பார்க்கும் செய்திகள்