சென்னை: மிச்சாங் புயல் சென்னை வெகு அருகே இருப்பதாலும், சென்னையின் மீது குவிந்துள்ள மேகக் கூட்டம் விலகாமல் நிற்பதாலும் பலத்த காற்றுடன் மிக கன மழை பெய்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு வரை பலத்த காற்றுடன் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மிச்சாங் புயல் சென்னைக்கு கிழக்கு வடக்கே 110 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இன்று முற்பகல் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும். அதன் பின்னர் வடதமிழகம் தெற்கு ஆந்திரா கடல் பகுதிக்கு இணையாக நகர்ந்து நாளை நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு கடும் பாதிப்பு
மிச்சாங் புயல் தீவிர புயலாக நாளை வழுப்பெறும் நிலையில் நேற்று இரவு முதல் தற்போது வரை சென்னை மற்றும் புறநகர் இடைவிடாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது சென்னை மாநகரமே நீரால் சூழ்ந்துள்ளது. இதுவரை இப்படிப்பட்ட பேய் மழையை கடந்த 2015ம் ஆண்டுதான் சென்னை சந்தித்தது. அப்போது ஏற்பட்ட மழை அளவை விட இப்போது மிக அதிகமாக மழை பெய்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் கடும் அவதியுற்றனர். தற்போது மழை நீரை வெளியேற்றும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பழவேற்காட்டில் ஊசி கொம்புகளில் அடித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நூறு படகுகளில் 50 படகுகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது. செஞ்சி அம்மன் பகுதியில் இடைவிடாத கனமழையால் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் செஞ்சியம்மன் பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கினர்.பின்னர் வெள்ளத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டனர்.
வெள்ளம் போல சூழ்ந்த மழை நீர்
தற்போது கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}