சென்னை: சட்டசபையில் அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் மு க ஸ்டாலின்.
தமிழக சட்டப்பேரவை இன்று தொடங்கியதும், 2010 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு பெறலாம் என விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரண்டர் விடுப்பு இந்தாண்டு செயல்படுத்த கோரிக்கை வைக்கபப்ட்டுள்ளது. இந்த கோரிக்கையை ஏற்று 1-10-2025 முதல் சரண்டர் விடுப்பு பயன்பெறலாம்.அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படும் என பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அதில்,

1.அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படும்.
2.அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பலன் பெறும் நடைமுறை அக்டோபரிலேயே அமல் செய்யப்படும்.
3.அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும்.
4.அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
5.ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகை ரூபாய் 500-ல் இருந்து ஆயிரமாக உயர்த்தப்படும்.
6.அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்புக்கான பணபலன் இந்த ஆண்டே வழங்கப்படும். 01-10-2025 முதல் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறலாம்.
7.4.3 வகையான ஓய்வூதியங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு செப்டம்பரில் அறிக்கை அளிக்கும்.
8.அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி தொழில்நுட்பக் கல்லூரி படிப்புக்காக ரூ.1 லட்சமும், கலை அறிவியல் படிப்புக்கு ரூ.50 ஆயிரமும் முன்பணம் வழங்கப்படும்.
9.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் தேவை அடிப்படையில் திருமண முன் பணம் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
10.ஓய்வூதியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
11.பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல்.. விஜய்யிடம் நாளை சம்பவம் செய்யப் போகும் சிபிஐ.. டெல்லியில் விசாரணை
தேசத்தின் மானம் காத்த.. தேசியக் கொடிகாத்த குமரனை தெரிந்து கொள்வோமா?
கூடாரவல்லியில் கைகூடும் மாங்கல்யம்!
குமரேசனாய் பிறந்து.. இமயம் முதல் குமரி வரை போற்றிய .. கொடி காத்த குமரன்!
வில்லிபுத்தூர் ஆண்டாளும் கூடார வல்லியின் சிறப்புகளும்!
தென்றல் காற்று தாலாட்ட.. தென்னங்கீற்று தலையாட்ட... குயிலின் ஓசை இசை பாட.. மழை!
இதற்கு மேல்....!
"200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்"...முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
தேமுதிக.,வுடன் கூட்டணி பேச்சு...ஆட்சியில் பங்கு விவகாரங்கள்...நயினார் 'நச்' பதில்
{{comments.comment}}