சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில், சிவகங்கை மாவட்டம் 98.31 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இதில் மொத்தம் 93.80 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 91.74 சதவீதமும், மாணவிகள் 95.88சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கமாக இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகள் 4.14 சதவிகிதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில், சிவகங்கை மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 98.31 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
அதேபோல், விருதுநகர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 97.45 சதவீதம் பெற்று இரண்டாவது இடத்தையும், தூத்துக்குடி மாவட்டம் 96.76% பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் கன்னியாகுமரி 96.66 சதவீதம் பெற்று நான்காவது இடத்தையும், திருச்சி 96.61 சதவீதம் பெற்று ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளது.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
சிவகங்கை - 98.31 %
விருதுநகர் - 97.45
தூத்துக்குடி - 96.76
கன்னியாகுமரி - 96.66
திருச்சி - 96.61
கோயம்புத்தூர்- 96.47
பெரம்பலூர்- 96.46
அரியலூர் - 96.38
தர்மபுரி - 96.31
கரூர் - 96.24
ஈரோடு- 96
தஞ்சாவூர் - 95.57
திருவாரூர்- 95.27
தென்காசி- 95.26
விழுப்புரம் -95.09
காஞ்சிபுரம் - 94.85
திருப்பூர் - 94.84
கிருஷ்ணகிரி -94.64
நாமக்கல் - 94.52
கடலூர் -94.51
திருநெல்வேலி -94.16
மதுரை- 93.93
மயிலாடுதுறை- 93.9
ராமநாதபுரம் - 93.75
புதுக்கோட்டை - 93.53
திண்டுக்கல்- 93.28
நீலகிரி - 93.26
திருவண்ணாமலை- 93.1
திருப்பத்தூர்- 92.86
சேலம்- 92.17
நாகப்பட்டினம் - 91.94
தேனி- 91.58
ராணிப்பேட்டை -91.3
சென்னை- 90.73
செங்கல்பட்டு -89.82
திருவள்ளூர் - 89.6
கள்ளக்குறிச்சி - 86.91
வேலூர்- 85.44
புதுச்சேரி- 97.37
காரைக்கால் - 93.6
நூற்றுக்கு நூறு தேர்ச்சி விகிதம்:

பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பண்கள் எடுத்தவர்கள் விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 10,838 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதேபோல் சமூக அறிவியலில் 10,256 மாணவர்களும், கணிதத்தில் 1,996 மாணவர்களும், ஆங்கிலத்தில் 346 மாணவர்களும்..
முதல் மொழியான தாய் மொழி தமிழில் 8 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?
தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்
டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு
சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்
திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!
கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்
70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?
நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!
{{comments.comment}}