சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு பாதுகாவலர் அமுல்ராஜ் மற்றும் பணியாளர் சுபாகரனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகை தொடர்ந்த வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று வளசரவாக்கம் போலீசார் சீமான் வீட்டு முன்பு சம்மன் ஒட்டினார். இந்த சம்மன் ஒட்டிய சில மணி நேரத்திலேயே சீமான் வீட்டு பணியாளர் சுபாகரன் சம்மனை கிழித்தெறிந்தார். இதனால், சீமான் வீட்டுப் பாதுகாவலர் அமுல்ராஜுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் பணியாளர் சுபாகரன் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் இருவரையும் கைது செய்து வலுக்கட்டாயமாக இழுத்து ஜீப்பில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் உள்ள துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் கைது செய்யப்பட்ட இருவர் மீதும், சம்மனைக் கிழித்து வேலை செய்ய விடாமல் தடுத்ததாக கூறி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து சீமான் விட்டு காவலர் மற்றும் பணியாளர்கள் இருவரும் ஜாமின் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள் செல்வம் என்பவர் பதில் அளிக்க கால அவகாசம் கேட்டார். போலீசார் பதில் அளிக்க கால அவகாசம் கொடுத்து மனு மீதான விசாரணை மார்ச் 13க்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் பணியாளர் தாக்கல் செய்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பாதுகாவலர் அமல்ராஜ் துப்பாக்கி உரிமையை மீறி இருந்தால் அதை ரத்து செய்வது தொடர்பாக அரசு முடிவு எடுக்கலாம். இருவரையும் இனி சிறையில் வைக்க தேவையில்லை என கூறி பணியாளர் சுபாகரன் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், மறு உத்தரவு வரும் வரை இருவரும் தினமும் காலை 10.30 மணிக்குள் பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாரணஹரியை நாளும் பணிந்து .. நற்பாதம் உய்வோமே!
அவள் தான் எங்கள் ஆனந்தஜோதி...!
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
Christmas: தவெகவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. மாமல்லபுரத்தில் இன்று விஜய் பேச்சு!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 22, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்
மார்கழி 07ம் நாள் வழிபாடு : திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 07 வரிகள்
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
{{comments.comment}}