Income tax rebate: புதிய வரித் திட்டத்தின் கீழ் உச்சவரம்பு ரூ. 7 லட்சமாக உயர்வு

Feb 01, 2023,12:38 PM IST
புதுடில்லி : இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் புதிய வருமான வரித் திட்டத்தின் வருமான உச்சவரம்பு,  ரூ. 7 லட்சம் ஆக அதிகரிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.



அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேலும் கூறுகையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான நடைமுறை காலம் 16 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ரூ.7 லட்சம் வரையிலான வருமான வரி ரிபேட் புதிய வரி முறையின் கீழ் கொண்டு வரப்படும். 

புதிய வரி விதிப்பு முறையின் கீழ் அதிகமாக உள்ள கூடுதல் கட்டண விகிதம் 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும்.   ரூ.15 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் இருந்தால் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.  

மத்திய பட்ஜெட் எதிரொலி : கிடுகிடுவென உயர்ந்த பங்குச்சந்தைகள்

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு இன்று காலை துவக்கம் முதலே இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டன. இந்நிலையில் வருமான வரி தொடர்பான அறிவிப்புக்களை நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே இந்திய பங்குச் சந்தைகள் கிடுகிடுவென உயர துவங்கி விட்டன.

பகல் 12.45 நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 60,500 புள்ளிகளை எட்டியது. தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 258 புள்ளிகள் உயர்ந்து 17,920 புள்ளிகளை எட்டியது.


சமீபத்திய செய்திகள்

news

செம்மொழியான தமிழ் மொழியே

news

தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!

news

இயற்கை நீதி!

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

அதிகம் பார்க்கும் செய்திகள்