சென்னை: சென்னையில் போத்தீஸ் ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
1977ம் ஆண்டு தொடக்கப்பட்டது தான் பிரபல ஜவுளிக்கடையான போத்தீஸ். முதன் முதலில இக்கடை ஸ்ரீவில்லிபுத்தூரில் தான் தொடங்கப்பட்டது. இன்று இப்பெரியல் பல்வேறு இடங்களில் பல கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தில் வருமான விரித்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
40க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் போத்தீஸ் ஜவுளி நிறுவன இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அபிராமபுரத்தில் போத்தீஸ் நிறுவன உரிமையாளர் ரமேஷ் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நீலாங்கரையில் உள்ள போத்தீஸ் நிறுவன உரிமையாளர் மகன்கள் அசோக், போத்ராஜா வீடுகளில் சோதனை நடைபெறுகிறது.

குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ண மஹால் நகை மற்றும் துணிக்கடையில் சோதனை நடைபெற்று வருகிறது. 3 கார்களில் வந்த 12 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பக்கவாட்டு வழியாக உள்ளே சென்று சோதனை செய்து வருகின்றனர். வழக்கமாக போலீஸ் அல்லது துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் வருமான வரி சோதனை நடத்தப்படும். இந்த சோதனை இன்று வழக்கத்துக்கு மாறாக எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் ஐ.டி. சோதனை நடைபெற்று வருகிறது. இந்த திடீர் சோதனை காரணமாக சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}