World cup Finals: சென்றது 8.. வென்றது 6.. மீண்டும் சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா.. வாழ்த்துகள்!

Nov 19, 2023,10:32 PM IST

அகமதாபாத்: உலகக் கோப்பைத் தொடர்களில் இதுவரை 8 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று அசைக்க முடியாத சாதனையுடன் வலுவாக உள்ள ஆஸ்திரேலியா தனது 6வது கோப்பையை வென்று கிரிக்கெட் உலகில் தான் ஒரு வல்லரசு என்பதை நிரூபித்துள்ளது.


கிரிக்கெட்டில் கில்லாடி அணிகள் பல உள்ளன. ஆனால் வல்லரசு அணிகள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு வெகு சிலரே உள்ளனர். அதையும் கூட குறுக்கினால், ஒரே ஒரு அணியை மட்டுமே சொல்ல முடியும். அதுதான் ஆஸ்திரேலியா.


முதல் உலககக் கோப்பை கிரிக்கெட் தொடர் முதல் நடப்பு தொடர் வரை அந்த அணியின் ஆதிக்கம் மிகப் பெரியது.  முதல் உலகக் கோப்பைப் போட்டியிலேயே ஆஸ்திரேலியா அணி மயிரிழையில்தான் கோப்பையை நழுவ விட்டது. ஜஸ்ட் 17 ரன்கள் வித்தியாசத்தில்தான் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வியைத் தழுவி முதல் கோப்பையை நழுவ விட்டது. 




ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தைப் போல வேறு எந்த உலக அணியும் கிரிக்கெட்டில் செலுத்தியதில்லை. கேப்டன்கள் மாறலாம், வீரர்கள் போகலாம்.. ஆனால் ஆஸ்திரேலியாவின் வலிமை தொடர் கதையாகவே உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.  13  உலகக் கோப்பைத் தொடர்களில் 8ல் இறுதிப் போட்டி வரை முன்னேறியது, அதில் 5 முறை கோப்பையை வென்றது என்பது மிகப் பெரிய சாதனை.


இந்த சாதனையை இதுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. அதிக முறை கோப்பை வாங்கிய அணியாக ஆஸ்திரேலியா தொடர்ந்து வீர நடை போட்டு வருகிறது. உலகக் கோப்பைத் தொடர்களில் ஆஸ்திரேலியாவின்  உச்சத்தைப் பார்க்கலாம்.


1975ம் ஆண்டு நடந்த முதல் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வியுற்றது.


1987ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தனது முதல் உலகக் கோப்பையை வென்றது.


1996ம் ஆண்டு மும்பையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோல்வியுற்றது.


1999ம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா தனது 2வது உலகக் கோப்பையை வென்றது.


2003ம் ஆண்டு ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தனது 3வது கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. 




2007ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி  தனது ஹாட்ரிக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. இது அந்த அணிக்கு 4வது உலகக் கோப்பையும் கூட.


2015ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்தை இறுதிப் போட்டியில் சந்தித்து தனது 5வது உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது ஆஸ்திரேலியா.


2023ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரிலும் கூட ஆரம்பத்தில் சறுக்கலாக ஆடி வந்த ஆஸ்திரேலியா பின்னர் சுதாரித்து ஆடி ஒவ்வொரு வெற்றியாக தட்டிப் பறித்து இறுதிப் போட்டிக்கு வந்தது. இந்தியாவின் மிகப் பெரிய பவுலிங் பலத்தை முறியடித்து தனது 6வது கோப்பையை வென்று விட்டது ஆஸ்திரேலியா.


கிரிக்கெட்டுக்கு வாழ்த்துகள்!

சமீபத்திய செய்திகள்

news

கள்ளக்குறிச்சி பூங்காவில் களை கட்டும் கூட்டம்.. படகு சவாரி, நீச்சல் குளம்.. கொண்டாட்டம்!

news

புத்தாண்டு அதிரடி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'பேடே சேல்' (Pay Day Sale) அறிவிப்பு!

news

எப்பப் பார்த்தாலும் உப்புமாதானா.. அப்படின்னு கேட்பவர்களுக்காக.. ஸ்பெஷல் கோதுமை ரவா பொங்கல்!

news

ராத்திரியானா சவுண்டு ஜாஸ்தியா இருக்கா.. குறட்டையை நிறுத்தும் இயற்கை வைத்தியம்!

news

ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!

news

ஆருத்ரா தரிசனம் எப்ப வருது தெரியுமா.. அதோட முக்கியத்துவம் என்னன்னு தெரியுமா?

news

சீனாவின் மகா மதில்.. உலக அதிசயங்கள் (தொடர்)

news

முதல்ல என்னை நான் பார்த்துக்கறேன்.. The promises make to my own soul

news

புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்

அதிகம் பார்க்கும் செய்திகள்