இந்துக்களுக்கு எதிரானது திமுக, இந்தியா கூட்டணி.. நிர்மலா சீதாராமன் தாக்கு

Sep 15, 2023,01:32 PM IST

டெல்லி: திமுகவும், இந்தியா கூட்டணியும் இந்துக்களுக்கும், சனாதன தர்மத்துக்கும் எதிரானவர்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார் நிர்மலா சீதாராமன்.  சமீபத்தில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அதேசமயம், அவரது பேச்சுக்கு ஆதரவுகளும் குவிந்தன.




இந்த நிலையில் என்டிடிவிக்கு நிர்மலா சீதாராமன் சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் இதுகுறித்து அவர் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேட்டியிலிருந்து சில பகுதிகள்:


இந்தியாவை உடைக்க விரும்புவோரை ஆதரிக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் கூட்டாளியான திமுகவின் தலைவர்கள் இந்துக்களுக்கும், சனாதன தர்மத்துக்கும் எதிராக பேசி வருகிறார்கள். அவர்களை காங்கிரஸ் பாதுகாக்க விரும்பகிறது.


தமிழ்நாட்டு அமைச்சர் பகிரங்கமாக, சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று சவால் விட்டுப் பேசுகிறார். அதை எதிர்க்கக் கூடாதாம், ஒழிக்க வேண்டுமாம். ஆனால் இவரது பேச்சை, இந்தியா கூட்டணியின் எந்தக் கட்சியும் பகிரங்கமாக, திட்டவட்டமாக கண்டிக்கவில்லை.


சனாதனத்தை எதிர்ப்பது என்பது திமுகவின் கொள்கை. அதுதான் அவர்களது அஜென்டா. அதை நான் பலமுறை பார்த்துள்ளேன்.  இவர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அது இந்தியாவின் இதர பகுதிகளுக்குத் தெரியாது. காரணம், மொழிப் பிரச்சினை. இதுநாள் வரை இது இப்படியேதான் இருந்து வந்தது.  ஆனால் இன்று அமைச்சர் பேசுவது என்னவென்று இந்தியாவின் அனைத்து மூலைகளுக்கும் பரவி விட்டது. காரணம், சமூக வலைதளங்களின் தாக்கத்தால். கடந்த 70 ஆண்டுகளாக விஷமப் பிரச்சாரத்தில்தான் ஈடுபட்டு வருகிறது திமுக.


தமிழ்நாடு அமைச்சரின் பேச்சு அரசியல் சாசனத்தையே கேலிக் கூத்தாக்கி விட்டது. தான் வகிக்கும் பதவிக்கும், எடுத்த உறுதிமொழிக்கும் எதிரானது என்றும் தெரிந்து வேண்டும் என்றேதான் அவர் பேசியுள்ளார் என்றார் நிர்மலா சீதாராமன்.

சமீபத்திய செய்திகள்

news

முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!

news

தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டில் இடம் பெற்ற ஒரு பெண்ணின் பெயர்.. யார் அவர்?

news

விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!

news

Movie review: வசூலை வாரிக் குவிக்கும் தேரே இஷ்க் மேய்ன்.. எப்படி இருக்கு படம்?

news

நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயசு.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

ஓம்கார ஹரியே .. ஒம் ஒம்ஹரியே கோவிந்தஹரியே .. கோவர்த்தனம் சுமந்த ஹரி நீ!

news

பேரின்பப் பெருவாழ்வு பெற்று உய்க... தேவாரத் தலங்களின் விளக்கமும், செல்லும் வழிகளும்!

news

நவதானிய லட்டு.. கர்ப்பிணிப் பெண்களுக்கு சூப்பரான உணவு.. ரத்தம் ஊறுமாம்!

news

சுண்டலான்னு.. கிண்டலா கேட்காதீங்க பாஸ் .. புரதங்களின் அரசன்.. குழந்தைகளின் சிறந்த snacks!

அதிகம் பார்க்கும் செய்திகள்