லோக்சபா தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக ஒன்று கூடும் இந்தியா கூட்டணி தலைவர்கள்

Aug 07, 2024,10:23 AM IST

டில்லி : லோக்சபா தேர்தல் நிறைவடைந்த பிறகு இந்தியா கூட்டணி தலைவர்கள் முதல் முறையாக சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதற்காக இந்த திடீர் சந்திப்பு என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன், பாஜக.,வை மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க விடக் கூடாது என்பதற்காக 20 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கின. லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களையும், இந்தியா கூட்டணி 243 இடங்களையும் பெற்றன. ஜூன் 04ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு, மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக., ஆட்சி அமைத்தது.




இந்நிலையில் லோக்சபா தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சி தலைவர்கள் இந்த வாரம் டில்லியில் முதல் முறையாக கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்க முன் ஜூன் 01ம் தேதி இவர்கள் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் தேதி இதுவரை இறுதி செய்யப்படவில்லையாம். 


ஜூன் 01ம் தேதி நடந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை. காரணம் அதே நாளில் மேற்குவங்கத்தில் பல தொகுதிகளில் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அதனால் இந்த முறை நடைபெறும் கூட்டத்தில் மமதா கண்டிப்பாக பங்கேற்பார் என சொல்லப்படுகிறது. தற்போது பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நடந்த வருவதால் ஏற்கனவே இந்தியா கூட்டணியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் டில்லியில் தான் இருந்து வருகிறார்கள். சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று டில்லி வந்தார். இன்னும் சில தலைவர்களும் டில்லி வர உள்ளதாக சொல்லப்படுகிறது.


ஏற்கனவே பார்லிமென்டில், ஆயுள் காப்பீடுகள் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி.,யை திரும்ப பெற வலியுறுத்தி பார்லிமென்ட் நுழைவுவாயில் அருகில் இந்தியா கூட்டணி எம்பி.,க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத் தொடர் துவங்கியது முதலே எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடப்பு பார்லிமென்ட் கூட்டம் நடக்க உள்ளது.  இதனால் இந்தியா கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க தான் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடலாம் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்திற்கு இப்போதே தேர்தல் பொறுப்பாளரை நியமித்த பாஜக.. மாஸ்டர் பிளான் என்னவோ!

news

போர்க்கொடி உயர்த்தும் கூட்டணி கட்சிகள்.. பொறுமை காக்கும் திமுக.. காத்திருக்கும் அதிமுக!

news

திருப்பதி பிரம்மோற்சவம் மற்றும் குலசை தசரா விழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

news

ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து வழக்கு... அக்டோபர் 30ல் தீர்ப்பு: குடும்ப நல நீதிமன்றம்

news

ஸ்டிராங் ஆன எடப்பாடி பழனிச்சாமி.. தனித்து விடப்பட்டாரா கே.ஏ.செங்கோட்டையன்.. என்ன திட்டம்?

news

திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

news

தமிழ்நாடு, பீகார், மே. வங்காள தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

news

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: கில் கேப்டன்!

news

5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்