டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் இல்லத்தில் இன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, டிஆர் பாலு, அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கார்கே பேசுகையில், 295 தொகுதிகளுக்கு மேல் நாங்கள் நிச்சயம் வெல்வோம். இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்கும். மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா, கலெக்டர்களை அழைத்துப் பேசி வருகிறார். இது அப்பட்டமான விதி மீறலாகும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளிக்கும். அதிகாரிகள் அரசியல் சாசனத்தை நிலைநாட்டும் வகையில் செயல்பட வேண்டும். பாரபட்சமாக செயல்படக் கூடாது.
இந்தியா கூட்டணிக் கட்சியின் வாக்குச் சாவடி முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடியும் வரை அங்கிருந்து வெளியேறக் கூடாது. தீவிரமாக கண்காணிக்க வேண்டும். எக்சிட் போல் மூலமாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. அதை முறியடிப்போம். எக்சிட் போல் விவாதங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பார்கள்.
கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணித் தலைவர்கள் இணைந்தே இருக்கின்றனர். எங்களைப்பிரிக்க எந்த சதி நடந்தாலும் அது ஜெயிக்காது என்றார் கார்கே.
வயசுக்கு முக்கியம் தரணும்.. இளம் நடிகையுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க மறுத்த மாதவன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படத்தின் முதல் வார வசூல் இவ்வளவா.. அதிர வைக்கும் டேட்டா!
கூலி நடிப்புக்குக் கிடைக்கும் அப்ளாஸ்.. ஸ்ருதி ஹாசன் செம ஹேப்பியாம் !
புலி வேட்டையாடும்போது அணில்கள் குறுக்கமறுக்க ஓடுது... விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்!
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி... நீலகிரி, கோவை மலைப்பகுதிகளுக்கு கனமழை... வானிலை மையம்
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கட்சி பேதம் இன்றி அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
உணர்வு ததும்பும் மதுரை மண்ணில்... இதயம் திறந்து... இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்: விஜய்!
ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!
தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்குங்கள் - பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
{{comments.comment}}