டெல்லி: இந்தியா - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே முதல் முறையாக முழு அளவிலான கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ளது.
இரு அணிகளும் 3 டிவென்டி 20 போட்டிகளில் மோதவுள்ளன. இந்தத் தகவலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்தப் போட்டிகள் நடைபெறும்.
ஜனவரி 11ம் தேதி மொஹாலி மைதானத்தில் முதல் போட்டி நடைபெறும். 14ம் தேதி இந்தூரில் 2வது போட்டியும், ஜனவரி 17ம் தேதி பெங்களூருவில் 3வது போட்டியும் நடைபெறும்.

நடந்து முடிந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக ஆடியது. பெரிய பெரிய ஜாம்பவான் அணிகளை பந்தாடியது. இங்கிலாந்தை அது வீழ்த்திய விதம் அனைவரையும் அதிர வைத்தது. உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 4 வெற்றிகளைப் பெற்று 6வது இடத்தைப் பிடித்து சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டி20 தொடர் ஆப்கானிஸ்தான் அணிக்கு நல்லதொரு பயிற்சியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், இந்தியாவுக்கு டஃப் தரும் வகையில் ஆப்கானிஸ்தான் கண்டிப்பாக ஆட முயற்சிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!
நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!
புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்
10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?
எங்களை அழைக்காமல் கூட்டம் போட்டால் எப்படி.. தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கேள்வி
74 வயதிலும் டப் கொடுக்கும் நிதீஷ் குமார்.. தேஜஸ்வி, காங்கிரஸ் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!
தூய்மையின் வடிவம் மற்றும் புத்திசாலித்தனத்தின் அற்புதம் (குழந்தைப் பருவம்)
கல்வி கற்பதின் நோக்கம் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல.. விட்டுக்கொடுத்தும், பற்றி வாழ்தலுமே!
{{comments.comment}}