பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. இரு அணிகளுக்கும் இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 150 ரன்களுக்கு இழந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். ஆனால் இந்திய பவுலர்கள், ஆஸ்திரேலியாவை நையப்புடைத்து விட்டனர். ஆஸ்திரேலியாவை 104 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது இந்தியா.

இதையடுத்து தனது 2வது இன்னிங்ஸை ஆடிய இந்தியா, இந்த முறை பட்டையைக் கிளப்பி விட்டது. பேட்டிங்கில் இந்தியா பிரித்து விளையாடியதைப் பார்த்து ஆஸ்திரேலியா பவுலர்கள் நிலை குலைந்து போனார்கள். யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடி 161 ரன்கள் குவித்தார். விராட் கோலி 100 ரன்களைக் குவித்து அதிரடி காட்டினார். கே.எல். ராகுல் தன் பங்குக்கு 77 ரன்களைக் குவித்தார். நிதீஷ் குமார் ரெட்டி 27 பந்துகளில் 38 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது இந்தியா.
மிகப் பெரிய இலக்குடன் ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலியாவை இந்த முறை ஜஸ்ப்ரீத் பும்ரா மிரட்டிவிட்டார். அவரும் முகம்மது சிராஜும் இணைந்து அதிரடியாக பந்து வீசி தலா 3 விக்கெட்களைச் சாய்த்தனர். வாஷிங்டன் சுந்தர் பிரமாதமாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்ஷித் ராணா, நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது. இறுதியில், 238 ரன்களில் சுருண்டு போனது ஆஸ்திரேலியா. இதனால் 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தனது வெற்றியைப் பதிவு செய்தது.
மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி அடிலைட் மைதானத்தில் வருகிற டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. 3வது போட்டி பிரிஸ்பேனில் டிசம்பர் 14ம் தேதியும், 4வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ம் தேதி மெல்போர்ன் நகரிலும், கடைசி டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி சிட்னியிலும் தொடங்கவுள்ளது. 1996ம் ஆண்டு முதல் இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் இதுவரை இந்தியா 10 முறையும், ஆஸ்திரேலியா 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் கடந்த 2016ம் ஆண்டு முதல் பார்டர் - கவாஸ்கர் தொடரை இந்தியா இழந்ததில்லை, தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பார்டர் கவாஸ்கர் தொடரில் இதுவரை மொத்தம் 56 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. அதில் இந்தியா 24 போட்டிகளையும், ஆஸ்திரேலியா 20 போட்டிகளையும் வென்றுள்ளன. 12 போட்டிகள் டிரா ஆகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!
மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
{{comments.comment}}