தரம்சலா: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவின் இன்றைய வெற்றியில் ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
இந்தியா இங்கிலாந்துக்கு இடையே தரம்சலாவில் ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நடந்து வந்தது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை 218 ரன்கள் இழந்தது. இதைத்தொடர்ந்து ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்ஸ் 477 ரன்களுக்கு முடித்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை 195 ரன்கள் இழந்ததால், இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில், ஜோ ரூட் 26 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 29 ரன்களும் எடுத்தனர்.சோயப் பாசீர் 11 ரன்களை எடுத்தார். இந்திய தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகளை சாய்த்தார், ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.
ஏற்கனவே நடந்த நான்கு கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் 4-1 என்ற கணக்கில் இந்த தொடரையும் இந்தியா வென்றுள்ளது. இங்கிலாந்து ஒரு போட்டியில் மட்டும் வென்றது.
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
வாயை மூடு
உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!
தண்ணிக்குள்ள ராஜா தான் தவழுகிறே மாசு தான்!
{{comments.comment}}