பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய ஜோடி மானு பேக்கர் - சரப்ஜித் சிங் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இது இந்தியாவுக்கு 2வது பதக்கமாகும். மானு பேக்கருக்கும் இது 2வது பதக்கம். இந்தியா பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. இந்த இரண்டுக்கும் மானு பேக்கரே காரணம் என்பது விசேஷமானது. இன்று நடந்த இறுதிப் போட்டியில் தென் கொரியாவுக்கு எதிராக இந்திய ஜோடி ஆடியது.

மானு பேக்கர் இன்று ஒரு புதிய சாதனையை படைத்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் ஒரே ஒலிம்பிக் போட்டியில் 2 பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனைதான் அது.
மானு பேக்கர் - சரப்ஜித் சிங் இணைக்கு பிரதமர் நரேந்திர மோடி உளளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் இவர்களுக்குப் பாராட்டுகளும், வாழ்த்தும் குவிகின்றன.
திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு
கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?
இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
ஜனநாயகன் படத்தை 10ம் தேதி ஏன் தள்ளி வைக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி
காணாமல் போன வைர மாலை (ஒரு பக்க சிறுகதை)
தமிழகத்தில் வச்சு செய்யப்போகும் கனமழை... எப்போ, எங்கெல்லாம் என்று தெரியுமா?
திமுக இனியாவது நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்: அண்ணாலை
பொம்மையம்மா.. பொம்மை!
நான் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆயிட்டேன்.. I got stunned!
{{comments.comment}}