புதுப் புது வரலாறு படைக்கக் காத்திருக்கும் சுப்மன் கில்.. 4 உலக சாதனைகளுக்கு ஆபத்து!

Jul 10, 2025,12:38 PM IST

லண்டன்: இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியக் கேப்டன் ஷுப்மன் கில் அனல் பறக்க வைத்து வருகிறார். அடுத்தடுத்து அவர் அதிரடி காட்டி வந்தால் 4 உலக சாதனைகளை அவர் இந்தத் தொடரில் முறியடிக்கலாம்.


முதல் இரண்டு போட்டிகளிலேயே 585 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தியுள்ளார். இன்னும் மூன்று ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலையில், லீட்ஸ் மற்றும் பர்மிங்காமில் அவர் காட்டிய அதே அபாரமான ஆட்டத்தைத் தொடர்ந்தால், பல வரலாற்றுச் சாதனைகளை அவர் தன் வசப்படுத்திக்கொள்ள முடியும். 


அடுத்ததாக லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துடன் மோதவுள்ள இந்திய அணிக்கு, கேப்டன் ஷுப்மன் கில், கிரிக்கெட்டின் சகாப்தமான சர் டொனால்ட் பிராட்மேன் படைத்த 3 சாதனைகளை முறியடிக்கும் பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம் வாங்க.




கேப்டனாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள்:


கேப்டனாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த சாதனையை சர் டான் பிராட்மேன் வைத்திருக்கிறார். 88 ஆண்டுகளுக்கு முன்பு, 1936-37 ஆஷஸ் தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் அவர் 810 ரன்கள் குவித்தார். ஷுப்மன் கில் தற்போது 585 ரன்களை 2 போட்டிகளில் சேர்த்துள்ளார். இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ளன. அதில் அவர் 225 ரன்கள் சேர்க்க எளிதாக முடியும். காரணம் சூப்பர் பார்மில் உள்ளார்.  எனவே இந்தத் தொடரில் பிராட்மேனின் இந்த நீண்ட கால சாதனை முறியடிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள்:


தற்போது இந்தச் சாதனையும் சர் டொனால்ட் பிராட்மேன் வசமே உள்ளது. அவர் 1930 ஆஷஸ் தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 974 ரன்கள் குவித்தார். இந்தச் சாதனையை முறியடிக்க, கில் எஞ்சிய ஆறு இன்னிங்ஸ்களில் தனது மொத்த ரன்களுடன் 390 ரன்கள் சேர்க்க வேண்டும். அதுவும் சாத்தியமானதே.


டெஸ்ட் கேப்டனாக அதிவேக 1000 ரன்கள்:


டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக வேகமாக 1000 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய ஜாம்பவானான பிராட்மேன் இந்தச் சாதனையை 11 இன்னிங்ஸ்களில் நிகழ்த்தினார். ஷுப்மன் கில் இதுவரை வெறும் 4 இன்னிங்ஸ்களில் 585 ரன்கள் எடுத்துள்ளார். இதே அதிரடி ரன் குவிப்பு விகிதத்தைத் தொடர்ந்தால், பிராட்மேனின் சாதனையை அவர் எளிதாக முறியடிக்கலாம்.


ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள்:


கேப்டனாக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்த சாதனையை சர் டான் பிராட்மேன் வைத்திருக்கும் நிலையில், ஒட்டுமொத்தப் பட்டியலில் மேற்கு இந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன் கிளைட் வால்காட் முதலிடத்தில் உள்ளார். வால்காட் 1955 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் 5 சதங்கள் அடித்திருந்தார். பிராட்மேனின் கேப்டன் சாதனைக்கு சமன் செய்ய கில்லுக்கு இன்னும் ஒரு சதம் தேவை, வால்காட்டின் சாதனையை எட்ட இரண்டு சதங்கள் தேவை.


5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1000 ரன்கள் எடுத்த சாதனையை உலகில் எந்த வீரரும் இதுவரை எட்டியதில்லை. இந்தச் சாதனையை சர் டான் பிராட்மேனால் கூட எட்ட முடியவில்லை. ஆனால் இங்கிலாந்து தொடர் முடிவதற்குள் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்த ஷுப்மன் கில்லுக்கு வாய்ப்பு உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்