இன்னும் அபிஷேக் சர்மா திருந்தவே இல்லையே.. சுனில் கவாஸ்கருக்கு வருத்தம்ப்பா!

Mar 08, 2026,07:16 PM IST

மும்பை: அபிஷேக் சர்மா தனது தவறுகளை இன்னும் திருத்திக் கொள்ளவே இல்லை. அவரை இறுதிப் போட்டியில் சேர்க்கக் கூடாது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.


இந்தியா- நியூசிலாந்து இடையே இன்று டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளை இப்போட்டி ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், இந்திய அணியில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். இந்தத் தொடரில் இதுவரை 80 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவை இறுதிப் போட்டியில் நீக்க வேண்டும் என்று கவாஸ்கர் பரிந்துரைத்துள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிராக அவர் அடித்த 55 ரன்கள் மட்டுமே பெரிய ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.




இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில், இது ஒரு கடினமான முடிவுதான். அபிஷேக் சர்மா ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கலாம், ஆனால் அவர் தனது அவுட் ஆகும் முறையிலிருந்து இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. ஒரே மாதிரியான பந்துகளில் மீண்டும் மீண்டும் ஆட்டமிழக்கிறார்.  அவருக்குப் பதிலாக இஷான் கிஷனை சஞ்சு சாம்சனுடன் தொடக்க வீரராக களமிறக்கி, பினிஷர் இடத்திற்கு ரிங்கு சிங்கை கொண்டு வர வேண்டும்.


சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியின் தன்னம்பிக்கை தற்போது குறைந்து காணப்படுவதால், அவருக்குப் பதிலாக குல்தீப் யாதவை அணியில் சேர்க்க வேண்டும். அகமதாபாத் போன்ற பெரிய மைதானங்களில் குல்தீப் யாதவ் சிறப்பாகச் செயல்படுவார் என்றார் கவாஸ்கர்.


அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த முக்கிய போட்டியில், இந்தியா தனது மூன்றாவது டி20 உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்