சென்னை: இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 தொடர் வரும் 25ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள நிலையில், சென்னை கடற்கரை டூ வேளச்சேரி இடையேயான மின்சார ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியா- இங்கிலாந்து இடையே ஐந்து டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா இங்கிலாந்து இடையேயான டி20 தொடரில் இந்திய அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றது.
இந்த ஆண்டு ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா டி20 தொடரில் ஓய்வு பெற்றுள்ள நிலையில், சூர்யகுமார் யாதவ் தலைமையில் அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, துருவ் ஜூரெல், முகமது சமி, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்திக் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஜோஸ் பாட்லர் தலைமையில் பில் சால்ட், பென் டக்கெட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தெல், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், அடில் ரஷீத், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் ஆகியோர் இங்கிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளனர். இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியுள்ளது. முதல் போட்டி கொல்கத்தாவில் நடந்துள்ள நிலையில், அடுத்து சென்னை, ராஜ்கோட், புனே, மும்பை ஆகிய இடங்களில் மற்ற போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் இந்தியா- இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி நேற்று,22 ஆம் தேதி கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் மொத்தம் 132 ரன்கள் எடுத்திருந்தது. இதனை டார்கெட் செய்து பின்னர் களம் இறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடியது. குறிப்பாக இந்திய அணியின் பந்து வீச்சிற்கு தாக்குப் பிடிக்காமல் சொற்பரன்களிலேயே அடுத்தடுத்த விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து அணி. இதனைத் தொடர்ந்து 12.5 ஓவர்களிலேயே இந்திய அணி 133 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ரசிகர்கள் முன்கூட்டியே ஆன்லைன் புக்கிங் செய்து வருகின்றனர். 25ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் 25ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தியா, இலங்கை இடையேயான இரண்டாவது டி20 போட்டியை முன்னிட்டு மின்சார ரயில் சேவையின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு செல்லும் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி 25 ஆம் தேதி சென்னை பீச்சில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 10 மணிக்கு புறப்படும். அதேபோல் இரவு 10.20 மணிக்கு சென்னை கடற்கரை டூ வேளச்சேரிக்கு புறப்படும் மற்றொரு ரயில் இரவு 10.30க்கு புறப்படும். வேளச்சேரி டூ சென்னை கடற்கரைக்கு 10 மணிக்கு புறப்படும் இந்த மின்சார ரயில், 25 ஆம் தேதி 10 நிமிடம் சேப்பாக்கத்தில் நின்று செல்லும் எனவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் வராது... சென்சார் வழக்கு ஜனவரி 21க்கு ஒத்திவைப்பு
முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிய டாக்டர் ராமதாஸ்... திமுக பக்கம் டேக் டைவர்ஷன் எடுக்கத் திட்டமா?
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
தேசியக் கட்சிகள் இல்லாமல் திராவிடக் கட்சிகளால் ஜெயிக்க முடியாதா??
பிறப்பு முதல் இறப்பு வரையிலான 50 வகையான அரசு சேவைகள்... இனி வீட்டிலிருந்தே பெறலாம்
நெருக்கடியை சந்திக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள்...கனத்த மெளனம் காக்கும் திரையுலகம்
நாம் சுவைக்க மறந்த வேர்க்கடலை சட்னி.. அதுக்குப் பின்னாடி இருந்த பாலிட்டிக்ஸ் தெரியுமா?
ஆஸ்கார் ரேசில் 'டூரிஸ்ட் ஃபேமிலி'...மேலும் 5 இந்திய படங்களும் இருக்கு
சின்னச் சின்னதா மாறுங்க.. ஹெல்த்தி ஆய்ருவீங்க.. Stay Healthy With Small Changes!
{{comments.comment}}