டெல்லி: 100வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும்போது நமது நாடு வளர்ந்த நாடாக, வல்லரசு நாடாக மாறியிருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வல்லரசு இந்தியாவில் ஊழலுக்கும், ஜாதிக்கும், மதவாதத்திற்கும் இடம் இருக்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.
டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது:

2047ம் ஆண்டு வாக்கில் இந்தியா வளர்ந்த நாடாக, வல்லரசு நாடாக மாறியிருக்கும். அந்த நாட்டில் ஜாதிகளுக்கும், மதவாதத்திற்கும், ஊழலுக்கும் இடம் இருக்காது. இவை இல்லாத தேசிய வாழ்வை நமது மக்கள் வாழ்வார்கள்.
உலகம் இன்று நமது தலைமையை எதிர்நோக்கி இருக்கிறது. நமது வழிகாட்டலை எதிர்நோக்கியுள்ளது. நமது கொள்கைகளும், நமது பார்வையும், எதிர்காலத்திற்கான பாதையாக உலக நாடுகள் பார்க்கின்றன. ஜிடிபியை அடிப்படையாக கொண்டு மட்டுமே இதுவரை வளர்ச்சியைப் பார்த்து வந்த உலகம் இன்று மனித வாழ்க்கையின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பார்க்க ஆரம்பித்துள்ளன. இந்த மாபெரும் மாற்றத்துக்கு இந்தியா மிகச் சிறந்த வினையூக்கியாக செயல்பட்டுள்ளது.
கோடானு கோடி பசி நிறைந்த வயிறுகள் அடங்கிய நாடாக, உலகம் நம்மைப் பார்த்து வந்தது. அது இப்போது மாறி விட்டது. 200 கோடி திறமையான கைககளும், 100 கோடி திறமையான மனங்களும் அடங்கிய நாடாக நாம் மாறி நிற்கிறோம்.
அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு நம்மை உலகம் நினைவு கூறும் வகையிலான அடித்தளத்தை அமைக்கக் கூடிய அளவிலான திறமைகளுடன் நாம் இப்போது இருக்கிறோம். இந்தியாவை மிகப் பெரிய மார்க்கெட்டாக உலகம் முன்பு பார்த்தது. இப்போது உலக சவால்களுக்கு விடை அளிக்கக் கூடிய தீர்வாக இந்தியா மாறியுள்ளது.
குறுகிய அரசியல் லாபத்திற்காக, இலவசங்கள் என்ற கலாச்சாரத்தைக் கொண்டு வந்து நாட்டை பெரும் நிதிச் சுமைக்கு முன்பு இருந்தவர்கள் ஆளாக்கி விட்டார்கள். தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட அவர்கள் மறந்து விட்டனர். மக்கள் மீது முன்பு இருந்த அரசுகளுக்கு நம்பிக்கை இல்லை. மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறி விட்டனர் என்றார் பிரதமர் மோடி.
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி
இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்
சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு
அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!
இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)
{{comments.comment}}