வாஷிங்டன்: இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா மற்றும் Axiom-4 குழுவினர் செவ்வாய்க்கிழமை கலிபோர்னியாவின் சான் டியாகோ அருகே வெற்றிகரமாக கடலில் இறங்கி பூமிக்கு திரும்பினர்.
18 நாட்கள் ISSல் தங்கியிருந்த பிறகு, 22.5 மணி நேர பயணத்தை அவர்கள் மேற்கொண்டு வந்து சேர்ந்துள்ளனர். சுபன்ஷு சுக்லா ISSக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். மேலும் 1984க்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் ஆவார். அவர் மனித ஆரோக்கியம், விண்வெளி விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் 60க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டார். இந்த மிஷன் இந்தியாவின் Gaganyaan திட்டத்திற்கு முக்கியமானது. இது Axiom Space, NASA மற்றும் SpaceX ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
Dragon விண்கலமும், Axiom_Space Ax-4 குழுவும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து சான் டியாகோ கடற்கரையில் இன்று காலை 2:31 மணிக்கு (இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில்) கடலில் இறங்கியது. சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்பினர். அவர்கள் மருத்துவப் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சுபன்ஷு சுக்லா ISSக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். 1984ல் ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் இவர்தான். ஜூன் 25, 2025 அன்று அவர் ISSக்குச் சென்றார். அங்கு 18 நாட்கள் இருந்தார். அவர் மனித ஆரோக்கியம், விண்வெளி விவசாயம், மன நலம் மற்றும் விண்வெளி உடை பொருட்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட சோதனைகளை செய்தார்.
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
{{comments.comment}}