டெல்லி: பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி பூர்ணம் குமார் ஷா இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் இந்தியா பாகிஸ்தானிடையே அன்று முதல் பதற்றம் நிலவியது. இந்நிலையில், கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி எல்லை தாண்டி தவறுதலாக பாகிஸ்தான் சென்றார் பாதுகாப்பு படை(BSF) வீரர் பூர்ணம் குமார்.
இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்களால் அவர் கைது செய்யப்பட்டார். அப்போதே அவரை அழைத்து வர இந்தியா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இந்தியா-பாகிஸ்தானிடையே மோதல் போக்கு இருந்ததால், பாகிஸ்தான் அவரை விடுவிக்க மறுத்து வந்தது. தற்போது இந்தியா-பாகிஸ்தானிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால், சுமார் 20 நாட்களுக்கு பின்னர் இந்திய ராணுவத்திடம் பூர்ணம் குமார் ஷா ஒப்படைக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரி வழியாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக எல்லை பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், அட்டாரி வாகா எல்லையில் பாகிஸ்தானில் இருந்து பூர்ணம் குமார் ஷா இன்று காலை 10,30 மணிக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இவர் கடந்த ஏப்ரல் 23ம் தேதி பிரோஸ்பூர் செக்டார் பகுதியில் பணியில் இருந்த போது, பூர்ணம் குமார் ஷா தவறுதலாகப் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தார்.
இதனால் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் அவரை தடுத்து வைத்தனர். பாகிஸ்தான் ரேஞ்சர்களுடனான தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர் தற்போது திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இந்தியாவில் சிக்கிய பாகிஸ்தான் ராணுவ ரேஞ்சர் முகமது அல்லா என்பவரை இந்தியா விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}