"ஹய்யோ சொக்கா சொக்கா.. எனக்கா 44 கோடி".. துபாய் புத்தாண்டு லாட்டரியில்.. பரிசை அள்ளிய இந்தியர்!

Jan 03, 2024,05:16 PM IST

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரைவராக பணியாற்றும் இந்தியருக்கு அந்த நாட்டின் புத்தாண்டு லாட்டரியில் ரூ. 44 கோடி பரிசு கிடைத்துள்ளது. இதை தன்னால் நம்பவே முடியவில்லை என்று அந்த டிரைவர் ஆனந்தத்தில் மூழ்கியுள்ளார்.


அவரது பெயர் முனாவர் பைரூஸ். இந்தியாவைச் சேர்ந்த இவர் அல் அயின் என்ற ஊரில் டிரைவராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஐந்து வருமாடக எமிரேட்ஸில் வேலை பார்த்து வருகிறார் பைரூஸ். இந்த நிலையில் புத்தாண்டு லாட்டரியை வாங்கியிருந்தார் பைரூஸ். அதில் அவருக்கு ரூ. 44 கோடி பரிசு கிடைத்துள்ளது. இதை அவர் எதிர்பார்க்கவே இல்லையாம். இன்னும் நம்ப முடியாத அதிர்ச்சியில் இருக்கிறார் பைரூஸ்.


மாதா மாதம் லாட்டரி டிக்கெட் வாங்குவது இவரது வழக்கம். இப்போதுதான் பரிசு கிடைத்துள்ளது. ஆனால் இந்த பரிசுச் சீட்டை இவர் மட்டும் வாங்கவில்லை. பைரூஸ் உள்பட 30 பேர் சேர்ந்து இந்த டிக்கெட்டை வாங்கியுள்ளதால் பரிசுத் தொகையும் இந்த 33 பேருக்கும் சமமாகப் போகும்.




இதுகுறித்து பைரூஸ் கூறுகையில், இதை என்னால நம்பவே முடியலைங்க.. எதிர்பார்க்கவே இல்லை. இந்தப் பணத்தை வைத்து என்ன செய்வது என்று கூட நான் இதுவரை நினைக்கவே இல்லை. ஆச்சரியமாக இருக்கிறது என்றார் பைரூஸ்.


குமரேசனுக்கும் "கும்" பரிசு!


இதே நாளில் இன்னொரு இந்தியருக்கும் லாட்டரியில் ரூ. 22 கோடி பரிசு கிடைத்துள்ளது. அவர் தமிழ்நாட்டுக்காரர். பெயர் சுதீஷ் குமார் குமரசேன். இவர் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தில் என்ஜீனியராகப் பணியாற்றி வருகிறார். அபுதாபியில் வேலை பார்க்கிறார்.


விமான நிலையத்துக்கு வரும்போது அவ்வப்போது லாட்டரி சீட்டு வாங்குவது இவரது வழக்கம். இந்த முறை 22 கோடிக்கு பரிசு கிடைத்துள்ளது இவருக்கு. தனது 7வயது மகள்தான் லாட்டரி சீட்டு நம்பரை தேர்வு செய்ததாக கூறுகிறார் குமரேசன். எனது குடும்பமே மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளது.


நாங்கள் சொந்த ஊரில் வீடு வாங்கியுள்ளோம். அந்த வீட்டின் மீது கடன் உள்ளது. அந்தக் கடனை தற்போது இந்த பரிசுத் தொகையை வைத்து அடைத்து விடுவோம் என்று கூறியுள்ளார் குமரேசன்.


நமக்கும் இப்படி பிரைஸ் அடிக்க மாட்டேங்குதே.. சொக்கா...!

சமீபத்திய செய்திகள்

news

தெய்வீக ஒளியின் கீழ்..Purpose, the Soul’s True Peace

news

அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

news

பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!

news

ஒரு மனசு.. பல சிந்தனைகள்...One mind and too many thoughts

news

திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

கடும் பனிமூட்டம்...டெல்லிக்கு ரெட் அலர்ட்

news

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

news

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

அதிகம் பார்க்கும் செய்திகள்